• Nov 14 2024

ரெலோ அமைப்பின் தலைமை தொடர்பில் விந்தன் தெரிவித்த கருத்தில் உண்மை தன்மை இல்லை- சபா.குகதாஸ் பதிலடி..!

Sharmi / Nov 9th 2024, 9:31 am
image

தமிழ் ஈழ விடுதலை இயக்க (ரெலோ) தலைவர் மற்றும் பொருளாளர் தொடர்பில் கட்சியின் யாழ் மாவட்ட உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் ஊடகங்களுக்கு வழங்கிய செய்தியில் உண்மைத் தன்மைகள் எதுவும் இல்லை என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) யாழ் மாவட்ட அமைப்பாளர் சபா.குகதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவரால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

ரெலோ அமைப்பின்  தலைவர் மற்றும் பொருளாளர் தொடர்பில் விந்தன் கனகரத்தினம் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் ஆதாரங்கள் அற்றவை என்பதையும் அவரின்  ஊடக அறிக்கைக்கு பின்னால் எமது கட்சிக்கு எதிரான தரப்பு ஒன்றின் நிகழ்ச்சி இருப்பதையும், கடந்த காலங்களில் விந்தன் போன்று வேறு பல கட்சிகளிலும் தேர்தல் காலங்களில் ஒரு சிலர் இப்படியான மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர். 

அத்தோடு இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களை பொதுமக்கள் இனங்கண்டு தக்க பதிலடியும் வழங்கியுள்ளனர்.

கட்சியின் தலைமைக்குழு கூட்டம் மற்றும் அதன் தீர்மானத்தின் உண்மைகளை மறைத்து பொய்களை திரிபுபடுத்தியதுடன் கட்சியின் வளர்ச்சியை கண்டு அஞ்சும் தரப்புக்களின் கைப்பிள்ளையாக மாறி உணர்ச்சி வசப்பட்டு எல்லை மீறி உளறியுள்ளார்.

கடந்த காலங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் கட்சிக்கு மாறாக செயற்பட்ட போது தலைமைக் குழு ஒழுக்காற்று நடவடிக்கை கோரிய போது கட்சியின் பொதுக் குழுவில் பகிரங்க மன்னிப்பு கோரி உள்வாங்கப்பட்ட விந்தன், மீண்டும் ஆதாரம் அற்ற குற்றச்சாட்டை கட்சியின் மாவட்ட அல்லது தலைமைக் குழுவிலோ முன்வைக்காமல் ஊடகங்களில் முன் பேசியிருப்பது பிரிதொரு தரப்பின் தூண்டலுடன் ரெலோவைப் பலவீனப்படுத்த வேண்டும் என்ற நிகழ்ச்சி நிரலில் இருப்பதை உணர முடிகிறது.

கட்சியில் நீண்டகாலமாக பயனிப்பதாக கூறும் விந்தன், கட்சியின் தலைமைக் குழுவில் ஆதாரத்துடன் தன்னுடைய குற்றச்சாட்டை முன்வைக்காது தேர்தல் அறிவிக்கப்பட்டு ஒரு மாதம் கடந்த நிலையில் தேர்தலுக்கான வாக்களிப்பு நெருங்கும் நேரத்தில் இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்ட உறுப்பினர் விந்தனுக்கு கட்சியின் நடைமுறைக்கு அமைவாக தலைக்குழு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும்.

எமது தாயக மக்களே தருணத்திற்கு ஏற்ப கதை மாறிப் பேசும் விந்தன் பழக்க தோஷத்தால் பிதற்றி திரிவது வழக்கம். சுய ஒழுக்கமற்றவர்களின் பொய்யான கருத்துக்களுக்கு நீங்கள்  முக்கியத்துவம் கொடுக்காமல் மனக் குழப்பம் அடையாமல் தொடர்ந்து உங்கள் மாறாத ஆதரவை வழங்குமாறு வேண்டுகின்றோம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.



ரெலோ அமைப்பின் தலைமை தொடர்பில் விந்தன் தெரிவித்த கருத்தில் உண்மை தன்மை இல்லை- சபா.குகதாஸ் பதிலடி. தமிழ் ஈழ விடுதலை இயக்க (ரெலோ) தலைவர் மற்றும் பொருளாளர் தொடர்பில் கட்சியின் யாழ் மாவட்ட உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் ஊடகங்களுக்கு வழங்கிய செய்தியில் உண்மைத் தன்மைகள் எதுவும் இல்லை என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) யாழ் மாவட்ட அமைப்பாளர் சபா.குகதாஸ் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பில் அவரால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,ரெலோ அமைப்பின்  தலைவர் மற்றும் பொருளாளர் தொடர்பில் விந்தன் கனகரத்தினம் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் ஆதாரங்கள் அற்றவை என்பதையும் அவரின்  ஊடக அறிக்கைக்கு பின்னால் எமது கட்சிக்கு எதிரான தரப்பு ஒன்றின் நிகழ்ச்சி இருப்பதையும், கடந்த காலங்களில் விந்தன் போன்று வேறு பல கட்சிகளிலும் தேர்தல் காலங்களில் ஒரு சிலர் இப்படியான மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர். அத்தோடு இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களை பொதுமக்கள் இனங்கண்டு தக்க பதிலடியும் வழங்கியுள்ளனர்.கட்சியின் தலைமைக்குழு கூட்டம் மற்றும் அதன் தீர்மானத்தின் உண்மைகளை மறைத்து பொய்களை திரிபுபடுத்தியதுடன் கட்சியின் வளர்ச்சியை கண்டு அஞ்சும் தரப்புக்களின் கைப்பிள்ளையாக மாறி உணர்ச்சி வசப்பட்டு எல்லை மீறி உளறியுள்ளார்.கடந்த காலங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் கட்சிக்கு மாறாக செயற்பட்ட போது தலைமைக் குழு ஒழுக்காற்று நடவடிக்கை கோரிய போது கட்சியின் பொதுக் குழுவில் பகிரங்க மன்னிப்பு கோரி உள்வாங்கப்பட்ட விந்தன், மீண்டும் ஆதாரம் அற்ற குற்றச்சாட்டை கட்சியின் மாவட்ட அல்லது தலைமைக் குழுவிலோ முன்வைக்காமல் ஊடகங்களில் முன் பேசியிருப்பது பிரிதொரு தரப்பின் தூண்டலுடன் ரெலோவைப் பலவீனப்படுத்த வேண்டும் என்ற நிகழ்ச்சி நிரலில் இருப்பதை உணர முடிகிறது.கட்சியில் நீண்டகாலமாக பயனிப்பதாக கூறும் விந்தன், கட்சியின் தலைமைக் குழுவில் ஆதாரத்துடன் தன்னுடைய குற்றச்சாட்டை முன்வைக்காது தேர்தல் அறிவிக்கப்பட்டு ஒரு மாதம் கடந்த நிலையில் தேர்தலுக்கான வாக்களிப்பு நெருங்கும் நேரத்தில் இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்ட உறுப்பினர் விந்தனுக்கு கட்சியின் நடைமுறைக்கு அமைவாக தலைக்குழு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும்.எமது தாயக மக்களே தருணத்திற்கு ஏற்ப கதை மாறிப் பேசும் விந்தன் பழக்க தோஷத்தால் பிதற்றி திரிவது வழக்கம். சுய ஒழுக்கமற்றவர்களின் பொய்யான கருத்துக்களுக்கு நீங்கள்  முக்கியத்துவம் கொடுக்காமல் மனக் குழப்பம் அடையாமல் தொடர்ந்து உங்கள் மாறாத ஆதரவை வழங்குமாறு வேண்டுகின்றோம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement