இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநிதி ஜெகான் குணதிலக தலைமையிலான உயர் மட்டக் குழுவினர் கல்முனை மனித உரிமைகள் பிராந்திய நிலையத்திற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டனர்.
இந்நிலையில், கல்முனை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் நெறிப்படுத்தலில் குழுக் கலந்துரையாடல்கள் இன்று இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலின் போது ஆணைக்குழுவின் சர்வதேச உறவுகளுக்கான பணிப்பாளர் க. கபிலன் வில்லவராஜன் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சட்ட உத்தியோகத்தர் ஏ.டபிள்யு.எம். அஹமட் ஆகியோர் பங்கேற்றனர்.
வலிந்து காணாமல் போன தமிழ் முஸ்லிம் உறவினர்களின் குடும்பத்தினர்கள் கலந்து கொண்டு ஆணைக்குழுவிடம் கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இக்குடும்ப உறுப்பினர்கள் எதிர்நோக்குகின்ற பாதுகாப்புப் பிரச்சினைகள், சட்ட ரீதியாகவுள்ள உரிமைகள் பற்றியும் இதனை பிரயோகிக்கின்ற போது ஏற்படுகின்ற சவால்கள் பற்றியும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது.
இது தவிர சிவில் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் போது தற்போதைய சூழலில் சிவில் அமைப்புக்கள் செயற்படுவதால் ஏற்படும் சவால்கள் அண்மையில் நடந்து கொண்டிருக்கும் மனித உரிமை மீறல்கள் பற்றியும் மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் இணைந்து செயற்படுவதற்கான பொறிமுறைகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கல்முனை பிராந்திய பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் போது தமிழ்மொழிப் பிரயோகத்தின் அவசியம் பற்றியும் பாதிக்கப்பட்டு பொலிஸ் நிலையங்களுக்கு வருகின்ற பொதுமக்களுக்கான விரைவான பரிகாரங்கள் மற்றும் வழக்கு நடைமுறையிலுள்ள சவால்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
Tpnrl கலந்துரையாடலின் போது கல்முனைப் பிராந்தியத்தில் காணப்படுகின்ற பொதுவான முரண்பாடுகள் பற்றி வேறு தனிக்குழுக் கலந்துரையாடல்கள் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலின் போது அம்பாரை மாவட்டத்தில் கரும்பு விவசாயிகளின் உணவுப் பாதுகாப்பு மற்றும் காணி உரிமை சம்பந்தமாகவும் நுரைச்சோலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சுனாமி வீடமைப்புத் திட்டம் மக்களிடம் இருபது வருடங்களுக்கு மேலாக கையளிக்கப்படாமை பற்றியும் காதி நீதிமன்றங்களின் அமர்வுகளின் போது பொலிசார் பாதுகாப்புக் கடமையில் இருக்காமையினால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
இதற்கு மேலதிகமாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாக ரீதியான பிரச்சினைகள் பற்றியும் அதனால் பொதுமக்கள் எதிர்நோக்கும் நிர்வாகக் குறைபாடுகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.மேற்படி மக்களின் கோரிக்கைகளை ஆணைக்குழு உரிய கவனமெடுத்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளர் கலாநிதி ஜெகான் குணதிலக தெரிவித்தார்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் கல்முனைக்கு திடீர் விஜயம். இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநிதி ஜெகான் குணதிலக தலைமையிலான உயர் மட்டக் குழுவினர் கல்முனை மனித உரிமைகள் பிராந்திய நிலையத்திற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டனர்.இந்நிலையில், கல்முனை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் நெறிப்படுத்தலில் குழுக் கலந்துரையாடல்கள் இன்று இடம்பெற்றது.இக்கலந்துரையாடலின் போது ஆணைக்குழுவின் சர்வதேச உறவுகளுக்கான பணிப்பாளர் க. கபிலன் வில்லவராஜன் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சட்ட உத்தியோகத்தர் ஏ.டபிள்யு.எம். அஹமட் ஆகியோர் பங்கேற்றனர்.வலிந்து காணாமல் போன தமிழ் முஸ்லிம் உறவினர்களின் குடும்பத்தினர்கள் கலந்து கொண்டு ஆணைக்குழுவிடம் கோரிக்கைகளை முன்வைத்தனர். இக்குடும்ப உறுப்பினர்கள் எதிர்நோக்குகின்ற பாதுகாப்புப் பிரச்சினைகள், சட்ட ரீதியாகவுள்ள உரிமைகள் பற்றியும் இதனை பிரயோகிக்கின்ற போது ஏற்படுகின்ற சவால்கள் பற்றியும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது.இது தவிர சிவில் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் போது தற்போதைய சூழலில் சிவில் அமைப்புக்கள் செயற்படுவதால் ஏற்படும் சவால்கள் அண்மையில் நடந்து கொண்டிருக்கும் மனித உரிமை மீறல்கள் பற்றியும் மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் இணைந்து செயற்படுவதற்கான பொறிமுறைகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.அதனைத் தொடர்ந்து கல்முனை பிராந்திய பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் போது தமிழ்மொழிப் பிரயோகத்தின் அவசியம் பற்றியும் பாதிக்கப்பட்டு பொலிஸ் நிலையங்களுக்கு வருகின்ற பொதுமக்களுக்கான விரைவான பரிகாரங்கள் மற்றும் வழக்கு நடைமுறையிலுள்ள சவால்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.Tpnrl கலந்துரையாடலின் போது கல்முனைப் பிராந்தியத்தில் காணப்படுகின்ற பொதுவான முரண்பாடுகள் பற்றி வேறு தனிக்குழுக் கலந்துரையாடல்கள் இடம்பெற்றது.இக்கலந்துரையாடலின் போது அம்பாரை மாவட்டத்தில் கரும்பு விவசாயிகளின் உணவுப் பாதுகாப்பு மற்றும் காணி உரிமை சம்பந்தமாகவும் நுரைச்சோலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சுனாமி வீடமைப்புத் திட்டம் மக்களிடம் இருபது வருடங்களுக்கு மேலாக கையளிக்கப்படாமை பற்றியும் காதி நீதிமன்றங்களின் அமர்வுகளின் போது பொலிசார் பாதுகாப்புக் கடமையில் இருக்காமையினால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.இதற்கு மேலதிகமாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாக ரீதியான பிரச்சினைகள் பற்றியும் அதனால் பொதுமக்கள் எதிர்நோக்கும் நிர்வாகக் குறைபாடுகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.மேற்படி மக்களின் கோரிக்கைகளை ஆணைக்குழு உரிய கவனமெடுத்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளர் கலாநிதி ஜெகான் குணதிலக தெரிவித்தார்.