• Sep 20 2024

வெளிநாட்டு ஆசை காட்டி பணமோசடி- தட்டிக்கேட்ட நபர்களுக்கு ஏற்பட்ட நிலை..!

Sharmi / Aug 6th 2024, 10:26 pm
image

Advertisement

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி  பல லட்சம் ரூபா பணத்தினை மோசடி செய்தவர் மீது தாக்குதல் நடத்தியவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் பிரான்ஸ் நாட்டிற்கு செல்வதற்காக 25 இலட்சம் ரூபா பணத்தினை நீர்கொழும்பு பகுதியில் வசிக்கும் நபர் ஒருவருக்கு வழங்கியுள்ளார். 

இந்நிலையில் அவர் சிங்கப்பூர் வரையில் அழைத்துச் செல்லப்பட்டு ஏமாற்றப்பட்டதுடன், மீண்டும் அவர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.

இதனையடுத்து பணத்தினை கொடுத்து ஏமாந்த நபரும் அவரது சகோதரனும், நீர்கொழும்பை சேர்ந்த நபரை யாழ்ப்பாணத்துக்கு அழைத்து தாக்குதல் நடாத்தி அவரிடமிருந்து  ஐந்து இலட்சம் ரூபா பணத்தினை பெற்றுக் கொண்டனர்.

தாக்குதலுக்கு உள்ளான நபர் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம், தாக்குதலை நடாத்திய இருவரும் கைது செய்யப்பட்டு இன்றையதினம்(06)  மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில் அவர்கள் இருவரையும் எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

வெளிநாட்டு ஆசை காட்டி பணமோசடி- தட்டிக்கேட்ட நபர்களுக்கு ஏற்பட்ட நிலை. வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி  பல லட்சம் ரூபா பணத்தினை மோசடி செய்தவர் மீது தாக்குதல் நடத்தியவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவதுயாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் பிரான்ஸ் நாட்டிற்கு செல்வதற்காக 25 இலட்சம் ரூபா பணத்தினை நீர்கொழும்பு பகுதியில் வசிக்கும் நபர் ஒருவருக்கு வழங்கியுள்ளார். இந்நிலையில் அவர் சிங்கப்பூர் வரையில் அழைத்துச் செல்லப்பட்டு ஏமாற்றப்பட்டதுடன், மீண்டும் அவர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.இதனையடுத்து பணத்தினை கொடுத்து ஏமாந்த நபரும் அவரது சகோதரனும், நீர்கொழும்பை சேர்ந்த நபரை யாழ்ப்பாணத்துக்கு அழைத்து தாக்குதல் நடாத்தி அவரிடமிருந்து  ஐந்து இலட்சம் ரூபா பணத்தினை பெற்றுக் கொண்டனர்.தாக்குதலுக்கு உள்ளான நபர் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம், தாக்குதலை நடாத்திய இருவரும் கைது செய்யப்பட்டு இன்றையதினம்(06)  மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர்.இந்நிலையில் அவர்கள் இருவரையும் எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement