• Nov 22 2024

தொடரும் இ.போ.ச ஊழியர்களின் பணிப்பகிஸ்கரிப்பு போராட்டம்...!மக்கள் கடும் விசனம்...!samugammedia

Sharmi / Dec 20th 2023, 10:18 am
image

இலங்கை போக்குவரத்துசபை பஸ் சாரதி ஒருவர் தாக்கப்பட்டுள்ள நிலையில் அவரை தாக்கியவர்களை கைதுசெய்யுமாறு வலியுறுத்தி மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்களில் பணி பகிஸ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.


நேற்று முன்தினம் மாலை கொக்கட்டிச்சோலை பகுதியில் வைத்து இலங்கை போக்குவரத்துசபையின் மட்டக்களப்பு டிப்போவின் சாரதி ஒருவர் தனியார் பஸ் சாரதி மற்றும் உதவியாளர்களினால் தாக்குதலுக்குள்ளாகி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.


இந்நிலையில் தாக்குதல் நடாத்தியவர்கள் கைதுசெய்யப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று முதல் மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்துசபை டிப்போ ஊழியர்கள் பணிபகிஸ்கரிப்பு போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.


இன்றைய தினமும் மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்துசபை டிப்போ ஊழியர்கள் பணிபகிஸ்கரிப்பு போராட்டத்தினை முன்னெடுத்துவரும் நிலையில் களுவாஞ்சிகுடி,வாழைச்சேனை,ஏறாவூர் ஆகிய டிப்போ ஊழியர்களும் குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் போராட்டத்தில் குதித்துள்ளனர்.


இந்த நிலையில் பொலிஸார் அசமந்த போக்குடன் செயற்படுவதன் காரணமாகவே தமது பணிபகிஸ்கரிப்பு போராட்டம் தொடர்வதாகவும் முறையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தால் தாங்கள் போராடவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது என மட்டக்களப்பு டிப்போ ஊழியர்கள் தெரிவித்தனர்.


தாக்குதல்தாரிகள் கைதுசெய்யப்படும் வரையில் தமது போராட்டம் தொடரும் என இலங்கை போக்குவரத்துச்சபையின் மட்டக்களப்பு டிப்போ ஊழியர்கள் தெரிவித்தனர்.


இதேநேரம் இலங்கை போக்குவரத்துசபை ஊழியர்களின் போராட்டம் காரணமாக மட்டக்களப்பின் இலங்கை போக்குவரத்துசபை பஸ்களின் சேவை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன.

இதன்காரணமாக பாடசாலை மாணவர்கள்,ஆசிரியர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



தொடரும் இ.போ.ச ஊழியர்களின் பணிப்பகிஸ்கரிப்பு போராட்டம்.மக்கள் கடும் விசனம்.samugammedia இலங்கை போக்குவரத்துசபை பஸ் சாரதி ஒருவர் தாக்கப்பட்டுள்ள நிலையில் அவரை தாக்கியவர்களை கைதுசெய்யுமாறு வலியுறுத்தி மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்களில் பணி பகிஸ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.நேற்று முன்தினம் மாலை கொக்கட்டிச்சோலை பகுதியில் வைத்து இலங்கை போக்குவரத்துசபையின் மட்டக்களப்பு டிப்போவின் சாரதி ஒருவர் தனியார் பஸ் சாரதி மற்றும் உதவியாளர்களினால் தாக்குதலுக்குள்ளாகி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.இந்நிலையில் தாக்குதல் நடாத்தியவர்கள் கைதுசெய்யப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று முதல் மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்துசபை டிப்போ ஊழியர்கள் பணிபகிஸ்கரிப்பு போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.இன்றைய தினமும் மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்துசபை டிப்போ ஊழியர்கள் பணிபகிஸ்கரிப்பு போராட்டத்தினை முன்னெடுத்துவரும் நிலையில் களுவாஞ்சிகுடி,வாழைச்சேனை,ஏறாவூர் ஆகிய டிப்போ ஊழியர்களும் குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் போராட்டத்தில் குதித்துள்ளனர்.இந்த நிலையில் பொலிஸார் அசமந்த போக்குடன் செயற்படுவதன் காரணமாகவே தமது பணிபகிஸ்கரிப்பு போராட்டம் தொடர்வதாகவும் முறையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தால் தாங்கள் போராடவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது என மட்டக்களப்பு டிப்போ ஊழியர்கள் தெரிவித்தனர்.தாக்குதல்தாரிகள் கைதுசெய்யப்படும் வரையில் தமது போராட்டம் தொடரும் என இலங்கை போக்குவரத்துச்சபையின் மட்டக்களப்பு டிப்போ ஊழியர்கள் தெரிவித்தனர்.இதேநேரம் இலங்கை போக்குவரத்துசபை ஊழியர்களின் போராட்டம் காரணமாக மட்டக்களப்பின் இலங்கை போக்குவரத்துசபை பஸ்களின் சேவை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன.இதன்காரணமாக பாடசாலை மாணவர்கள்,ஆசிரியர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement