• Nov 22 2024

நாட்டின் சட்டமூலம் பழுதுபட்டுள்ளது - எம்.ஏ.சுமந்திரன் ஆவேசம்..!samugammedia

mathuri / Jan 23rd 2024, 10:21 pm
image

இன்று பழுதுபட்ட சட்ட மூலத்தினை நாங்கள் பார்த்துக்கொண்டு உள்ளோம் ஓட்டுமொத்த செயன்முறையும் தவறானது என இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்றைய பாராளுமன்ற அமர்வின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன் போதும் மேலும் கருத்து தெரிவித்த அவர், 

சபையில் முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கை உண்மையான அறிக்கை அல்ல.  ஒரு காகிதம் அறிக்கை ஆகிவிட முடியாது. அதில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் உண்மையில் ஒரு அவமானமான விடயம். சபையில் உள்ள உறுப்பினர்களையும் அவர்களினுடைய புத்தி கூர்மையையும் நாட்டினுடைய  மக்களின் புத்திக்கூர்மையையும் அவமானப்படுத்துவதாக இந்த அறிக்கைஉள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று சபையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை உண்மையான அறிக்கை அல்ல எனவே இது சட்ட விரோதமான விவாதம் ஆகும். இவ் அறிக்கையின் மூலம் பாராளுமன்ற பிரதிநிதிகளின் எழுத்தறிவாற்றலையும் அவர்களுடைய அறிவு பூச்சியம் என்பதையும்  அவர்கள் நடந்து கொண்ட விதம் காட்டுகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைய தினம் துறைசார் மேற்பார்வைக்குழு ஆளும்தரப்பு கட்சி எதிர் தரப்பு கட்சிகளை இணைத்து கலந்துரையாடியுள்ள நிலையில் மீண்டும் வர்த்தமானி அறிவித்தலை பிரசுரிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் சட்டமூலம் பழுதுபட்டுள்ளது - எம்.ஏ.சுமந்திரன் ஆவேசம்.samugammedia இன்று பழுதுபட்ட சட்ட மூலத்தினை நாங்கள் பார்த்துக்கொண்டு உள்ளோம் ஓட்டுமொத்த செயன்முறையும் தவறானது என இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.இன்றைய பாராளுமன்ற அமர்வின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன் போதும் மேலும் கருத்து தெரிவித்த அவர், சபையில் முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கை உண்மையான அறிக்கை அல்ல.  ஒரு காகிதம் அறிக்கை ஆகிவிட முடியாது. அதில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் உண்மையில் ஒரு அவமானமான விடயம். சபையில் உள்ள உறுப்பினர்களையும் அவர்களினுடைய புத்தி கூர்மையையும் நாட்டினுடைய  மக்களின் புத்திக்கூர்மையையும் அவமானப்படுத்துவதாக இந்த அறிக்கைஉள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.இன்று சபையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை உண்மையான அறிக்கை அல்ல எனவே இது சட்ட விரோதமான விவாதம் ஆகும். இவ் அறிக்கையின் மூலம் பாராளுமன்ற பிரதிநிதிகளின் எழுத்தறிவாற்றலையும் அவர்களுடைய அறிவு பூச்சியம் என்பதையும்  அவர்கள் நடந்து கொண்ட விதம் காட்டுகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.நேற்றைய தினம் துறைசார் மேற்பார்வைக்குழு ஆளும்தரப்பு கட்சி எதிர் தரப்பு கட்சிகளை இணைத்து கலந்துரையாடியுள்ள நிலையில் மீண்டும் வர்த்தமானி அறிவித்தலை பிரசுரிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement