• Nov 17 2024

பதில் பொலிஸ் மா அதிபர் உட்பட மூன்று பொலிஸாருக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Chithra / Dec 14th 2023, 3:38 pm
image

 

ஒரு தனிநபரின் அடிப்படை உரிமைகளை மீறியமை தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன்  உட்பட மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு நட்டஈடு வழங்குமாறு உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

அதன்படி குறிப்பிடப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களின் தனிப்பட்ட நிதியில் இருந்து இந்த 2 மில்லியன் தொகையை செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உட்பட நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் 2011 ஆம் ஆண்டு மனுதாரர் டபிள்யூ.ரஞ்சித் சுமங்கலவை சட்டவிரோதமாக கைதுசெய்து, தடுத்துவைத்து, அவரை சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதன் மூலம், தேசபந்து தென்னகோனின் மேற்பார்வையின் கீழ் இருந்த மிரிஹான பொலிஸ் நிலையத்தில் அவரது அடிப்படை உரிமைகளை மீறியுள்ளனர் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த விவகாரத்தில் தொடர்புடைய இராணுவத்தின் ஓய்வுபெற்ற சார்ஜன்ட் மேஜர் அஜித் வனசுந்தர என்ற தனியார் தரப்பினரும் பொறுப்புக் கூறப்பட்டு நட்டஈடு வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது மனுதாரருக்கு ரூ.100,000 இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதுடன் தேசபந்து தென்னகோன் உட்பட அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு தேசிய பொலிஸ் ஆணைக்குழு உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உச்ச நீதிமன்றம் மேலும் உத்தரவிட்டுள்ளது.

நீதிபதிகள் குமுதினி விக்கிரமசிங்க மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோரின் இணக்கப்பாட்டுடன் நீதியரசர் எஸ்.துரைராஜா இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.

பதில் பொலிஸ் மா அதிபர் உட்பட மூன்று பொலிஸாருக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு  ஒரு தனிநபரின் அடிப்படை உரிமைகளை மீறியமை தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன்  உட்பட மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு நட்டஈடு வழங்குமாறு உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.அதன்படி குறிப்பிடப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களின் தனிப்பட்ட நிதியில் இருந்து இந்த 2 மில்லியன் தொகையை செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உட்பட நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் 2011 ஆம் ஆண்டு மனுதாரர் டபிள்யூ.ரஞ்சித் சுமங்கலவை சட்டவிரோதமாக கைதுசெய்து, தடுத்துவைத்து, அவரை சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதன் மூலம், தேசபந்து தென்னகோனின் மேற்பார்வையின் கீழ் இருந்த மிரிஹான பொலிஸ் நிலையத்தில் அவரது அடிப்படை உரிமைகளை மீறியுள்ளனர் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.இந்த விவகாரத்தில் தொடர்புடைய இராணுவத்தின் ஓய்வுபெற்ற சார்ஜன்ட் மேஜர் அஜித் வனசுந்தர என்ற தனியார் தரப்பினரும் பொறுப்புக் கூறப்பட்டு நட்டஈடு வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்போது மனுதாரருக்கு ரூ.100,000 இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதுடன் தேசபந்து தென்னகோன் உட்பட அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு தேசிய பொலிஸ் ஆணைக்குழு உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உச்ச நீதிமன்றம் மேலும் உத்தரவிட்டுள்ளது.நீதிபதிகள் குமுதினி விக்கிரமசிங்க மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோரின் இணக்கப்பாட்டுடன் நீதியரசர் எஸ்.துரைராஜா இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement