• Nov 28 2024

15ஆம் திகதியுடன் நிறைவடையும் கால அவகாசம்! அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் முக்கிய அறிவிப்பு

Chithra / Mar 11th 2024, 7:13 am
image


அஸ்வெசும கொடுப்பனவு திட்டத்தின் இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோருவது எதிர்வரும் மார்ச் 15ஆம் திகதியுடன் முடிவடைகின்றது.

இதற்கான விண்ணப்பங்களை இதுவரை சமர்ப்பிக்காதவர்கள் இணையம் மூலமாகவோ அல்லது 

பிரதேச செயலாளர்கள் மூலமாகவோ விண்ணப்பிக்க முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இரண்டாம் கட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு ஜூலை மாதம் முதல் உரிய கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளது.

தற்போது, ஏறக்குறைய 2 மில்லியன் மக்கள் நன்மைகளைப் பெறுவதற்கு உரிமையுடையவர்கள் மற்றும்

இரண்டாவது கட்டத்தில் அந்த எண்ணிக்கையை 2.4 மில்லியனாக அதிகரிக்க எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன், இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இதற்காக 205 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

15ஆம் திகதியுடன் நிறைவடையும் கால அவகாசம் அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் முக்கிய அறிவிப்பு அஸ்வெசும கொடுப்பனவு திட்டத்தின் இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோருவது எதிர்வரும் மார்ச் 15ஆம் திகதியுடன் முடிவடைகின்றது.இதற்கான விண்ணப்பங்களை இதுவரை சமர்ப்பிக்காதவர்கள் இணையம் மூலமாகவோ அல்லது பிரதேச செயலாளர்கள் மூலமாகவோ விண்ணப்பிக்க முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.அதேவேளை, இரண்டாம் கட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு ஜூலை மாதம் முதல் உரிய கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளது.தற்போது, ஏறக்குறைய 2 மில்லியன் மக்கள் நன்மைகளைப் பெறுவதற்கு உரிமையுடையவர்கள் மற்றும்இரண்டாவது கட்டத்தில் அந்த எண்ணிக்கையை 2.4 மில்லியனாக அதிகரிக்க எதிர்பார்க்கப்படுகிறது.அத்துடன், இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இதற்காக 205 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement