• May 03 2024

முக்கிய நாட்டின் இளம் காற்பந்து நட்சத்திரம் மறைவு-சோகத்தில் நாடு! samugammedia

Tamil nila / Apr 6th 2023, 5:20 pm
image

Advertisement

சிங்கப்பூரின் இளம் காற்பந்து நட்சத்திரம் கார்த்திக் ராஜ் மணிமாறன் நேற்றைய தினம்(ஏப்ரல் 5) தனது  25 வயதில் உயிரிழந்துள்ளார். 

 சிங்கப்பூர் கால்ஸா சங்கமே  இந்த துயர் செய்தியினை  அதன் சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ளது. 

சிங்கப்பூர் காற்பந்து லீக்கின் முதல் பிரிவு 1 இல் விளையாடிய கார்த்திக், தமது அணியுடன் கடந்த வாரம் கோலாலம்பூர் சென்றிருந்தார்.

ஏப்ரல் 1 ஆம் திகதி  திடீர் வலிப்பு ஏற்பட்டு கார்த்திக் பாதிக்கப்பட்டமையால், அதன் பின்னர் அவர் கோலாலம்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். 

ஏப்ரல் 2 ஆம் திகதி  கார்த்திக் சிங்கப்பூருக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டு  சிங்கப்பூர் பொது மருத்துவமனையின் அவசர மருத்துவ சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். 

இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். 

சிறந்த இளம் விளையாட்டளர்களில் ஒருவரான கார்த்திக் திறமையானவர் என்றும் அணிக்காக துடிப்புடன் செயல்படக் கூடியவர் என்றும் அவரின் மறைவுக்கு சிங்கப்பூர் காற்பந்து சங்கம்  அனுதாபத்தை தெரிவிப்பதாகவும் கூறியுள்ளது. 

சிங்கப்பூர் காற்பந்து லீக்கின் முதல் பிரிவு 1 இன் 2022 பருவக் கிண்ணத்தை சிங்கப்பூர் கால்ஸா சங்கம் வென்றது. அந்த அணியில் கார்த்திக் இடம்பெற்றிருந்ததுடன் சிங்கப்பூர் பிரிமியர் லீக்கிலும் விளையாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய நாட்டின் இளம் காற்பந்து நட்சத்திரம் மறைவு-சோகத்தில் நாடு samugammedia சிங்கப்பூரின் இளம் காற்பந்து நட்சத்திரம் கார்த்திக் ராஜ் மணிமாறன் நேற்றைய தினம்(ஏப்ரல் 5) தனது  25 வயதில் உயிரிழந்துள்ளார்.  சிங்கப்பூர் கால்ஸா சங்கமே  இந்த துயர் செய்தியினை  அதன் சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ளது. சிங்கப்பூர் காற்பந்து லீக்கின் முதல் பிரிவு 1 இல் விளையாடிய கார்த்திக், தமது அணியுடன் கடந்த வாரம் கோலாலம்பூர் சென்றிருந்தார்.ஏப்ரல் 1 ஆம் திகதி  திடீர் வலிப்பு ஏற்பட்டு கார்த்திக் பாதிக்கப்பட்டமையால், அதன் பின்னர் அவர் கோலாலம்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஏப்ரல் 2 ஆம் திகதி  கார்த்திக் சிங்கப்பூருக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டு  சிங்கப்பூர் பொது மருத்துவமனையின் அவசர மருத்துவ சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். சிறந்த இளம் விளையாட்டளர்களில் ஒருவரான கார்த்திக் திறமையானவர் என்றும் அணிக்காக துடிப்புடன் செயல்படக் கூடியவர் என்றும் அவரின் மறைவுக்கு சிங்கப்பூர் காற்பந்து சங்கம்  அனுதாபத்தை தெரிவிப்பதாகவும் கூறியுள்ளது. சிங்கப்பூர் காற்பந்து லீக்கின் முதல் பிரிவு 1 இன் 2022 பருவக் கிண்ணத்தை சிங்கப்பூர் கால்ஸா சங்கம் வென்றது. அந்த அணியில் கார்த்திக் இடம்பெற்றிருந்ததுடன் சிங்கப்பூர் பிரிமியர் லீக்கிலும் விளையாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement