அடுத்த ஐந்து ஆண்டுகளில், இந்த நாட்டின் பொருளாதாரத்தையே, கட்டி எழுப்பக்கூடிய ஒரு மாவட்டமாக திருகோணமலை மாறும் என தேசிய மக்கள் சக்தியின் தலைமை வேட்பாளர் அருண் ஹேமச்சந்திர நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
திருகோணமலை வெள்ளைமணல் பிரதேசத்தில் நேற்று(31) இரவு நடைபெற்ற, தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர், இவ்வாறு தெரிவித்தார்.
ராஜபக்ஷ, ஜெயவர்த்தன, பிரேமதாச ஆகிய பரம்பரையினரின் எஞ்சிய அழுக்கடைந்த அரசியல் பாரம்பரியத்தையும் எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதியுடன் முடிவுக்கு கொண்டு வர நாட்டு மக்கள் தயாராகி விட்டனர்.
அந்த வழியிலே திருகோணமலை மாவட்டமும் தேசிய மக்கள் சக்தியினால் வெற்றி கொள்ளப்படுவது உறுதியாகிவிட்டது.
திருகோணமலை மாவட்டம் சகல வளங்களும் கொண்டிருந்தும், 76 வருடங்களுக்கு மேலாக நாட்டு மக்களுக்கு, எந்த வகையிலையேனும் பிரயோசனப்படவில்லை.
அடுத்த ஐந்து ஆண்டுகளில், இந்த நாட்டின் பொருளாதாரத்தையே, கட்டி எழுப்பக்கூடிய ஒரு மாவட்டமாக இது மாறும் என்பதில், எந்தவிதமான சந்தேகமும் இல்லை.
இந்த நாட்டின் அரசியல் வரலாற்றில், கடந்த செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி முக்கிய மாற்றம் ஒன்று நிகழ்ந்திருக்கிறது. அதனது தொடர்ச்சி எதிர்வரும் 14ஆம் திகதி பாராளுமன்றத்தை சுத்தப்படுத்துவதோடு, நிறைவுபெறும்.
எனது அணியில், இந்த மாவட்டத்தில் போட்டியிடுகின்ற, ஏனைய ஆறு வேட்பாளர்களின் கைகளும் சுத்தமானவை.
ஊழல் மோசடியில் ஈடுபடாதவர்கள். கட்சிக்காகவும் மக்களுக்காகவும் விசுவாசமானவர்கள். எதிர்காலத்திலும் பணப் பைகளுக்கு சோரம் போக மாட்டார்கள்.
எனவே, இந்த நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாத்து, எல்லா இன மக்களும் இந்த நாட்டுப் பிரஜையே என்ற தேசிய ஒற்றுமையை தேசிய மக்கள் சக்தி, ஏற்படுத்தும் என்பதை, உறுதியாக கூறுகிறேன்.
வாக்களிப்பதற்கு முன் நன்றாக சிந்தியுங்கள். அரசியலுக்காக இனங்களை மோத விட்டு, சுவை பார்த்த அந்த அரசியல் வரலாற்றை நினைத்துப் பாருங்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
அழுக்கடைந்த அரசியல் பாரம்பரியம் எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதியுடன் முடிவுக்கு- அருண் ஹேமச்சந்திர சூளுரை. அடுத்த ஐந்து ஆண்டுகளில், இந்த நாட்டின் பொருளாதாரத்தையே, கட்டி எழுப்பக்கூடிய ஒரு மாவட்டமாக திருகோணமலை மாறும் என தேசிய மக்கள் சக்தியின் தலைமை வேட்பாளர் அருண் ஹேமச்சந்திர நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.திருகோணமலை வெள்ளைமணல் பிரதேசத்தில் நேற்று(31) இரவு நடைபெற்ற, தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர், இவ்வாறு தெரிவித்தார்.ராஜபக்ஷ, ஜெயவர்த்தன, பிரேமதாச ஆகிய பரம்பரையினரின் எஞ்சிய அழுக்கடைந்த அரசியல் பாரம்பரியத்தையும் எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதியுடன் முடிவுக்கு கொண்டு வர நாட்டு மக்கள் தயாராகி விட்டனர். அந்த வழியிலே திருகோணமலை மாவட்டமும் தேசிய மக்கள் சக்தியினால் வெற்றி கொள்ளப்படுவது உறுதியாகிவிட்டது.திருகோணமலை மாவட்டம் சகல வளங்களும் கொண்டிருந்தும், 76 வருடங்களுக்கு மேலாக நாட்டு மக்களுக்கு, எந்த வகையிலையேனும் பிரயோசனப்படவில்லை. அடுத்த ஐந்து ஆண்டுகளில், இந்த நாட்டின் பொருளாதாரத்தையே, கட்டி எழுப்பக்கூடிய ஒரு மாவட்டமாக இது மாறும் என்பதில், எந்தவிதமான சந்தேகமும் இல்லை.இந்த நாட்டின் அரசியல் வரலாற்றில், கடந்த செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி முக்கிய மாற்றம் ஒன்று நிகழ்ந்திருக்கிறது. அதனது தொடர்ச்சி எதிர்வரும் 14ஆம் திகதி பாராளுமன்றத்தை சுத்தப்படுத்துவதோடு, நிறைவுபெறும்.எனது அணியில், இந்த மாவட்டத்தில் போட்டியிடுகின்ற, ஏனைய ஆறு வேட்பாளர்களின் கைகளும் சுத்தமானவை. ஊழல் மோசடியில் ஈடுபடாதவர்கள். கட்சிக்காகவும் மக்களுக்காகவும் விசுவாசமானவர்கள். எதிர்காலத்திலும் பணப் பைகளுக்கு சோரம் போக மாட்டார்கள்.எனவே, இந்த நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாத்து, எல்லா இன மக்களும் இந்த நாட்டுப் பிரஜையே என்ற தேசிய ஒற்றுமையை தேசிய மக்கள் சக்தி, ஏற்படுத்தும் என்பதை, உறுதியாக கூறுகிறேன். வாக்களிப்பதற்கு முன் நன்றாக சிந்தியுங்கள். அரசியலுக்காக இனங்களை மோத விட்டு, சுவை பார்த்த அந்த அரசியல் வரலாற்றை நினைத்துப் பாருங்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.