• Apr 07 2025

மறைந்திருந்து தாக்கிய யானை...! பரிதாபமாக உயிரிழந்த குடும்பஸ்தர்...! பண்ணைக்கு சென்ற போது விபரீதம்...!

Sharmi / Jun 15th 2024, 12:20 pm
image

கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வான்எல சுண்டியாற்று பகுதியில் நேற்றையதினம் (14)இரவு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கிண்ணியா இடிமனை பகுதியை சேர்ந்த 26 வயதுடைய இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

குறித்த குடும்பஸ்தர் தனது தந்தையுடைய பண்ணைக்கு சென்றவேளை அங்கு மறைந்திருந்த யானை குடும்பஸ்தரை தாக்கிய நிலையில் குடும்பஸ்தர் உயிரிழந்தாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் உயிரிழந்த குடும்பஸ்தரின் சடலம் பிரேத ப‌ரிசோதனை‌க்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

அதேவேளை குறித்த பகுதியில் இரண்டு வாரத்துக்குள் யானையின் தாக்குதலில் நான்கு பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


மறைந்திருந்து தாக்கிய யானை. பரிதாபமாக உயிரிழந்த குடும்பஸ்தர். பண்ணைக்கு சென்ற போது விபரீதம். கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வான்எல சுண்டியாற்று பகுதியில் நேற்றையதினம் (14)இரவு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.கிண்ணியா இடிமனை பகுதியை சேர்ந்த 26 வயதுடைய இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,குறித்த குடும்பஸ்தர் தனது தந்தையுடைய பண்ணைக்கு சென்றவேளை அங்கு மறைந்திருந்த யானை குடும்பஸ்தரை தாக்கிய நிலையில் குடும்பஸ்தர் உயிரிழந்தாக தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில் உயிரிழந்த குடும்பஸ்தரின் சடலம் பிரேத ப‌ரிசோதனை‌க்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்அதேவேளை குறித்த பகுதியில் இரண்டு வாரத்துக்குள் யானையின் தாக்குதலில் நான்கு பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now