• May 03 2024

கச்சதீவில் பௌத்த விகாரை அமைக்கப்படுத்தல் இலங்கை அரசாங்கத்தின் இன, மத வெறியின் உச்சக்கட்டமே- சுரேஷ் சீற்றம்!SamugamMedia

Sharmi / Mar 25th 2023, 4:16 pm
image

Advertisement

கச்சத்தீவில் பௌத்த விகாரை அமைப்படுதல் என்பது இலங்கை அரசாங்கத்தின் இனவாதத்தினதும், மதவாதத்தினதும் உச்ச கட்டமாகவே தென்படுவதாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
                                                      
.இன்று  அவரது  இல்லத்தில் விசேடமாக ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலார் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கச்சத்தீவில் பௌத்த விகாரை அமைக்கப்படுவது தொடர்பாக குறிப்பிடுகையில்,

கச்சதீவானது இலங்கைக்கு திருமதி.இந்திராகாந்தி அவர்களால் கையளிக்கப்பட்ட பொழுது இலங்கை மற்றும் இந்திய மீனவர்கள் பயன்படுத்தல்,வலை காய விடுதல் மற்றும் ஓய்வெடுத்தல் போன்ற விடயங்களும் உள்ளடக்கப்பட்டதுடன் அங்கிருக்கும் அந்தோனியார் ஆலயத்திற்கு வருடம் ஒருமுறை திருவிழா நடத்துவது போன்ற ஏற்பாடும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

அந்த ஆலயத்தின் திருவிழாவினை யாழ்ப்பாணம், பங்கு தந்தையர்கள் தலைமை தாங்கி நடத்துவதுடன் இலங்கையின் வடமாகாணம் மற்றும் திலகத்திலிருந்தும் மக்கள் பங்கேற்று வரும் நிலையில் இந்த முறை இடம்பெற்ற திருவிழாவில் என்றும் இல்லாதவாறு  பௌத்த பிக்குக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

அத்துடன் கடற்படையின் உதவியுடன் அங்கு பௌத்த விகாரை ஒன்று கட்டப்பட்டுள்ளது அல்லது கட்டப்பட்டுக்கொண்டு வருவதுடன் வெடியரசன் கோட்டையும் பௌத்தர்களுடையது என கூறி கடற்படையினரால் அவற்றை பிரதிபலிக்கும் பெயர் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறாக சிங்களவர்கள் வாழாத அல்லது செல்லாத கச்சத்தீவில் பௌத்த விகாரை கட்டப்படுவதானது வடக்கு கிழக்கில் மிக விரைவாக பௌத்தத்தினை பரப்புவதற்கான ஏற்பாடாகவுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான செயற்பாடுகளிற்கு இந்திய ஸ்வேரும் பார்வைர்வையாளராக இருக்குமாயின் எதிர்காலத்தின் கச்சத்தீவின் மூலம் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதில் உத்தரவாதம் இல்லை  எனவும் ஐயம் வெளியிட்டுள்ளார்.

95 சதவிகிதமாக தமிழர் வாழும் வடக்கு மாகாணத்தில் சிங்கள மக்களை குடியமர்த்துவது மற்றும் பௌத்த விகாரைகளை அமைத்து போன்ற விடயங்களை கட்டுப்படுத்த இந்தியா முழு மூச்சுடன் செயற்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா அனைத்து விடயங்களிலும் பாராமுகமாக இருக்கின்றதா என்ற கேள்வி இலங்கை தமிழர்களிடம் உள்ளதாகவும் அவ்வாறு இந்தியா அமைதி காத்தால் தமிழ் மக்களிடமிருக்கும் நம்பிக்கையும் பறிபோகும் எனவும்  தெரிவித்துள்ளார்.

கச்சதீவில் பௌத்த விகாரை அமைக்கப்படுத்தல் இலங்கை அரசாங்கத்தின் இன, மத வெறியின் உச்சக்கட்டமே- சுரேஷ் சீற்றம்SamugamMedia கச்சத்தீவில் பௌத்த விகாரை அமைப்படுதல் என்பது இலங்கை அரசாங்கத்தின் இனவாதத்தினதும், மதவாதத்தினதும் உச்ச கட்டமாகவே தென்படுவதாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.                                                      .இன்று  அவரது  இல்லத்தில் விசேடமாக ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலார் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கச்சத்தீவில் பௌத்த விகாரை அமைக்கப்படுவது தொடர்பாக குறிப்பிடுகையில், கச்சதீவானது இலங்கைக்கு திருமதி.இந்திராகாந்தி அவர்களால் கையளிக்கப்பட்ட பொழுது இலங்கை மற்றும் இந்திய மீனவர்கள் பயன்படுத்தல்,வலை காய விடுதல் மற்றும் ஓய்வெடுத்தல் போன்ற விடயங்களும் உள்ளடக்கப்பட்டதுடன் அங்கிருக்கும் அந்தோனியார் ஆலயத்திற்கு வருடம் ஒருமுறை திருவிழா நடத்துவது போன்ற ஏற்பாடும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது எனவும் தெரிவித்துள்ளார். அந்த ஆலயத்தின் திருவிழாவினை யாழ்ப்பாணம், பங்கு தந்தையர்கள் தலைமை தாங்கி நடத்துவதுடன் இலங்கையின் வடமாகாணம் மற்றும் திலகத்திலிருந்தும் மக்கள் பங்கேற்று வரும் நிலையில் இந்த முறை இடம்பெற்ற திருவிழாவில் என்றும் இல்லாதவாறு  பௌத்த பிக்குக்கள் கலந்து கொண்டுள்ளனர். அத்துடன் கடற்படையின் உதவியுடன் அங்கு பௌத்த விகாரை ஒன்று கட்டப்பட்டுள்ளது அல்லது கட்டப்பட்டுக்கொண்டு வருவதுடன் வெடியரசன் கோட்டையும் பௌத்தர்களுடையது என கூறி கடற்படையினரால் அவற்றை பிரதிபலிக்கும் பெயர் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறாக சிங்களவர்கள் வாழாத அல்லது செல்லாத கச்சத்தீவில் பௌத்த விகாரை கட்டப்படுவதானது வடக்கு கிழக்கில் மிக விரைவாக பௌத்தத்தினை பரப்புவதற்கான ஏற்பாடாகவுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். இவ்வாறான செயற்பாடுகளிற்கு இந்திய ஸ்வேரும் பார்வைர்வையாளராக இருக்குமாயின் எதிர்காலத்தின் கச்சத்தீவின் மூலம் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதில் உத்தரவாதம் இல்லை  எனவும் ஐயம் வெளியிட்டுள்ளார். 95 சதவிகிதமாக தமிழர் வாழும் வடக்கு மாகாணத்தில் சிங்கள மக்களை குடியமர்த்துவது மற்றும் பௌத்த விகாரைகளை அமைத்து போன்ற விடயங்களை கட்டுப்படுத்த இந்தியா முழு மூச்சுடன் செயற்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்தியா அனைத்து விடயங்களிலும் பாராமுகமாக இருக்கின்றதா என்ற கேள்வி இலங்கை தமிழர்களிடம் உள்ளதாகவும் அவ்வாறு இந்தியா அமைதி காத்தால் தமிழ் மக்களிடமிருக்கும் நம்பிக்கையும் பறிபோகும் எனவும்  தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement