• Jan 23 2025

வினாத்தாள் வெளியானதால் இன்று இடைநிறுத்தப்பட்ட பரீட்சை! ஆரம்பமான விசாரணை

Chithra / Jan 6th 2025, 12:06 pm
image


வடமத்திய மாகாணத்தின் 11ஆம் தர சிங்கள இலக்கிய வினாத்தாள், பரீட்சைக்கு முன்னரே வெளியாகியுள்ளதாக மாகாண கல்விச் செயலாளர் சிறிமெவன் தர்மசேன தெரிவித்துள்ளார்.

இந்த வினாத்தாள் நேற்று (05) நள்ளிரவு சமூக ஊடகங்கள் ஊடாக வெளியாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

இதன் காரணமாக இன்று நடைபெறவிருந்த பரீட்சை இடை நிறுத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மாகாண கல்வி அதிகாரிகள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி, இதனுடன் தொடர்புடையவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என மாகாண கல்விச் செயலாளர் சிறிமெவன் தர்மசேன வலியுறுத்தினார்.

விரைவில் குறித்த பாடத்திற்கான பரீட்சையை நடத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் சிறிமெவன் தர்மசேன குறிப்பிட்டுள்ளார்.

வினாத்தாள் வெளியானதால் இன்று இடைநிறுத்தப்பட்ட பரீட்சை ஆரம்பமான விசாரணை வடமத்திய மாகாணத்தின் 11ஆம் தர சிங்கள இலக்கிய வினாத்தாள், பரீட்சைக்கு முன்னரே வெளியாகியுள்ளதாக மாகாண கல்விச் செயலாளர் சிறிமெவன் தர்மசேன தெரிவித்துள்ளார்.இந்த வினாத்தாள் நேற்று (05) நள்ளிரவு சமூக ஊடகங்கள் ஊடாக வெளியாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்இதன் காரணமாக இன்று நடைபெறவிருந்த பரீட்சை இடை நிறுத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.சம்பவம் தொடர்பில் மாகாண கல்வி அதிகாரிகள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி, இதனுடன் தொடர்புடையவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என மாகாண கல்விச் செயலாளர் சிறிமெவன் தர்மசேன வலியுறுத்தினார்.விரைவில் குறித்த பாடத்திற்கான பரீட்சையை நடத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் சிறிமெவன் தர்மசேன குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement