• Sep 28 2024

குரங்குகள் ஏற்றுமதி; இந்திய - இலங்கை கலாசாரத்தை பாதிக்குமா..? வெளியான தகவல் samugammedia

Chithra / Apr 19th 2023, 8:39 am
image

Advertisement

இலங்கையின் குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்காக முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கை குறித்து, சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை கற்கைகள் நிலையம் இந்தியாவின் கவனத்துக்கு கொண்டுசெல்லவுள்ளது.

கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு இது குறித்து இன்று கடிதம் ஒன்றின் மூலம் அறியப்படுத்த உள்ளதாக சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை கற்கைகள் நிலையம் தெரிவித்துள்ளது.

குரங்குகள், மிருகக்காட்சிசாலைகளுக்கு அழைத்துச் செல்லப்படுவதாக கூறப்பட்டாலும், அதன் நோக்கம் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை.


இலங்கைக்கு உரித்தான குரங்குகளை சீனாவுக்கு வழங்கும் வேலைத்திட்டத்தின் மூலம், இந்தியாவினதும், இலங்கையினதும் கலாசாரத்துக்கு பாதிப்பை ஏற்படும் என அந்த நிலையத்தின் தேசிய இணைப்பாளர் ரவீந்திர காரியவசம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் உள்ள குரங்களுக்கும், இலங்கையில் உள்ள குரங்களுக்கும் மரபணு ரீதியான தொடர்புகள் உள்ளதுடன், கலாசார ரீதியான பிணைப்பும் உள்ளது.

எனவே, குரங்குகளை சீனாவுக்கு அனுப்பும் நடவடிக்கைக்கு, எதிர்ப்பு தெரிவிப்பதாக, சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை கற்கைகள் நிலையத்தின் தேசிய இணைப்பாளர் ரவீந்திர காரியவசம் தெரிவித்துள்ளார்.

குரங்குகள் ஏற்றுமதி; இந்திய - இலங்கை கலாசாரத்தை பாதிக்குமா. வெளியான தகவல் samugammedia இலங்கையின் குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்காக முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கை குறித்து, சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை கற்கைகள் நிலையம் இந்தியாவின் கவனத்துக்கு கொண்டுசெல்லவுள்ளது.கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு இது குறித்து இன்று கடிதம் ஒன்றின் மூலம் அறியப்படுத்த உள்ளதாக சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை கற்கைகள் நிலையம் தெரிவித்துள்ளது.குரங்குகள், மிருகக்காட்சிசாலைகளுக்கு அழைத்துச் செல்லப்படுவதாக கூறப்பட்டாலும், அதன் நோக்கம் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை.இலங்கைக்கு உரித்தான குரங்குகளை சீனாவுக்கு வழங்கும் வேலைத்திட்டத்தின் மூலம், இந்தியாவினதும், இலங்கையினதும் கலாசாரத்துக்கு பாதிப்பை ஏற்படும் என அந்த நிலையத்தின் தேசிய இணைப்பாளர் ரவீந்திர காரியவசம் தெரிவித்துள்ளார்.இந்தியாவில் உள்ள குரங்களுக்கும், இலங்கையில் உள்ள குரங்களுக்கும் மரபணு ரீதியான தொடர்புகள் உள்ளதுடன், கலாசார ரீதியான பிணைப்பும் உள்ளது.எனவே, குரங்குகளை சீனாவுக்கு அனுப்பும் நடவடிக்கைக்கு, எதிர்ப்பு தெரிவிப்பதாக, சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை கற்கைகள் நிலையத்தின் தேசிய இணைப்பாளர் ரவீந்திர காரியவசம் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement