பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் நிகழ்வுகளின் போது பெற்றோர்களிடம் பணம் வசூலிக்கக் கூடாது என கல்வி, விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்ப அமைச்சு அறிவித்துள்ளது.
பாடசாலைகளில் சிறுவர் தினம், ஆசிரியர் தினம் உள்ளிட்ட பல்வேறு விழாக்களை கொண்டாட பெற்றோர்களிடம் பணம் வசூலிப்பதாக பல்வேறு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அமைச்சின் செயலாளர் ஜே. எம். திலகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இதனால், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதுடன்,
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளதாகவும் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, பாடசாலைகளில் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படாதவாறு அதிபர்கள் உறுதியளிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இதுபோன்ற நிகழ்வுகளை நடத்துவதற்காக பெற்றோரிடம் பணம் வசூலிக்கக் கூடாது என மாகாணக் கல்விச் செயலாளர்கள், மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள், பிராந்தியக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்டப் பணிப்பாளர்கள், அரசாங்க அதிபர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகள் மற்றும் அதிபர்களுக்கு கடிதம் மூலம் செயலாளர் மேலும் அறிவித்துள்ளார்.
இலங்கைப் பாடசாலைகளில் இனிமேல் இவற்றுக்கு தடை வெளியான அதிரடி அறிவிப்பு பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் நிகழ்வுகளின் போது பெற்றோர்களிடம் பணம் வசூலிக்கக் கூடாது என கல்வி, விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்ப அமைச்சு அறிவித்துள்ளது.பாடசாலைகளில் சிறுவர் தினம், ஆசிரியர் தினம் உள்ளிட்ட பல்வேறு விழாக்களை கொண்டாட பெற்றோர்களிடம் பணம் வசூலிப்பதாக பல்வேறு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அமைச்சின் செயலாளர் ஜே. எம். திலகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.இதனால், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதுடன், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளதாகவும் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.எனவே, பாடசாலைகளில் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படாதவாறு அதிபர்கள் உறுதியளிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.மேலும், இதுபோன்ற நிகழ்வுகளை நடத்துவதற்காக பெற்றோரிடம் பணம் வசூலிக்கக் கூடாது என மாகாணக் கல்விச் செயலாளர்கள், மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள், பிராந்தியக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்டப் பணிப்பாளர்கள், அரசாங்க அதிபர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகள் மற்றும் அதிபர்களுக்கு கடிதம் மூலம் செயலாளர் மேலும் அறிவித்துள்ளார்.