• Nov 25 2024

பள்ளிவாசலுக்கு சென்ற குடும்பத்தினர்...! மாயமான தங்க நகைகள்...! பொலிஸார் எடுத்த நடவடிக்கை...!

Sharmi / Mar 18th 2024, 4:34 pm
image

பல இலட்சம் பெறுமதியான தங்க நகைகளை திட்டமிட்டு களவாடிய 3 சந்தேக நபர்களை சவளக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அம்பாறை சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 5 ஆம் கொலனி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த 14 ஆம் திகதியன்று இரவு வீடு ஒன்றின் ஜன்னல் உடைக்கப்பட்டு உள் நுழைந்தவர்களால் சுமார் 39 இலட்சத்திற்கும் அதிகமான 20 பவுண் நகைகள் களவாடப்பட்டுள்ளதாக பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

களவு இடம்பெற்ற வீட்டின் உரிமையாளர்கள் நோன்பு இரவு நேர  வணக்க வழிபாட்டிற்காக பள்ளிவாசலுக்கு சென்ற சமயம் பார்த்து 3 சந்தேக நபர்கள் இச்செயலை மேற்கொண்டதுடன் சுமார் 20 பவுண் நகைகளை குறித்த வீட்டின் ஜன்னலை உடைத்து எடுத்து சென்றிருந்தனர்.

இந்நிலையில் உடனடியாக செயற்பட்ட சவளக்கடை பொலிஸார் இத்திருட்டில் ஈடுபட்ட சாளம்பைக்கேணியை சேர்ந்த 33, 26 ,28, வயது மதிக்கத்தக்க சந்தேக நபர்களை கைது செய்ததுடன் சந்தேக நபர்கள் வசம் இருந்து களவாடி செல்லப்பட்ட 20 பவுண் நகைகளும் பொலிஸாரினால் மீட்கப்பட்டன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை கல்முனை நீதிவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.




பள்ளிவாசலுக்கு சென்ற குடும்பத்தினர். மாயமான தங்க நகைகள். பொலிஸார் எடுத்த நடவடிக்கை. பல இலட்சம் பெறுமதியான தங்க நகைகளை திட்டமிட்டு களவாடிய 3 சந்தேக நபர்களை சவளக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,அம்பாறை சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 5 ஆம் கொலனி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த 14 ஆம் திகதியன்று இரவு வீடு ஒன்றின் ஜன்னல் உடைக்கப்பட்டு உள் நுழைந்தவர்களால் சுமார் 39 இலட்சத்திற்கும் அதிகமான 20 பவுண் நகைகள் களவாடப்பட்டுள்ளதாக பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.களவு இடம்பெற்ற வீட்டின் உரிமையாளர்கள் நோன்பு இரவு நேர  வணக்க வழிபாட்டிற்காக பள்ளிவாசலுக்கு சென்ற சமயம் பார்த்து 3 சந்தேக நபர்கள் இச்செயலை மேற்கொண்டதுடன் சுமார் 20 பவுண் நகைகளை குறித்த வீட்டின் ஜன்னலை உடைத்து எடுத்து சென்றிருந்தனர்.இந்நிலையில் உடனடியாக செயற்பட்ட சவளக்கடை பொலிஸார் இத்திருட்டில் ஈடுபட்ட சாளம்பைக்கேணியை சேர்ந்த 33, 26 ,28, வயது மதிக்கத்தக்க சந்தேக நபர்களை கைது செய்ததுடன் சந்தேக நபர்கள் வசம் இருந்து களவாடி செல்லப்பட்ட 20 பவுண் நகைகளும் பொலிஸாரினால் மீட்கப்பட்டன.கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை கல்முனை நீதிவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement