• Oct 18 2024

பண்ணையாளர்களுக்கு தினமும் 10 தொடக்கம் 12 லீற்றர் பால் கறவைப்பசுக்கள் வழங்கப்படும்! மட்டக்களப்பில் ஜனாதிபதி தெரிவிப்பு samugammedia

Chithra / Oct 8th 2023, 3:46 pm
image

Advertisement


கிழக்கு மாகாணத்தை அடுத்த பத்து ஆண்டுகளில்  முழுமையாக அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரம சிங்க தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடன் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒப்பந்தத்திற்கமைவாக திருகோணமலை மாவட்டம் அபிவிருத்தி செய்யப்படும். 

அதேபோன்று மகாவெளி ஏ மற்றும் பி பிரிவின் கீழ் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

முன்னாள் அமைச்சர் கேடபிள்யு. தேவநாயகம், ஜேஆர் ஜயவர்தன மற்றும் நானும் சமகாலத்தில் அமைச்சரவையில் இருந்தவர்கள். 

அக்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தை மகாவெளி திட்டத்தின்கீழ் அபிவிருத்தி செய்வதற்கு முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் போர் காரணமாக தடைப்பட்டது. இதனால் மட்டக்களப்பு மாவட்டத்தை விரைவாக அபிவிருத்தி செய்வதற்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் விவசாயம், கடல் தொழில் மற்றும் உல்லாசப் பணத்துறை ஆகிய அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. 

விவசாயத்துறையில் நவீனத்துவம் உட்புகுத்தப்படும். பண்ணையாளர்களும் தினமும் பத்து தொடக்கம் 12 லீற்றர் பால் கறவைப்பசுக்கள் வழங்கப்படும். அதேபோன்று இலட்சக்கணக்கான உல்லாசப்பயணிகள் வரக்கூடிய பிரதேசமாக கிழக்கு மாகாணம் மாற்றப்படும்.

செங்கலடி மத்திய கல்லூரி பல துறைகளில் முன்னேற்றம் கண்டுள்ளது. இங்கு சில வகையான நடனங்கள் அரங்கேற்றப்பட்ட போதிலும் மேற்கத்தேய நடனம் இருக்கவில்லை.  நான் அடுத்த முறை இங்கு வரும்போது மேற்கத்தேய நடனமும் அரங்கேற்றப்படவேண்டுமென எதிர்பார்க்கிறேன். இப்பாடசாலைக்கு நான் தொழில் நுட்ப கூடமொன்றை வழங்கவுள்ளேன் என்றார்.

பாடசாலை அதிபர் குகதாசன் தலைமையில் நடைபெற்ற இவ் விழாவில் கிழக்கு  மாகாண ஆளுநர் செந்தில்; தொண்டமான், இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மற்றும் துறைசார் அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர். 


பண்ணையாளர்களுக்கு தினமும் 10 தொடக்கம் 12 லீற்றர் பால் கறவைப்பசுக்கள் வழங்கப்படும் மட்டக்களப்பில் ஜனாதிபதி தெரிவிப்பு samugammedia கிழக்கு மாகாணத்தை அடுத்த பத்து ஆண்டுகளில்  முழுமையாக அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரம சிங்க தெரிவித்துள்ளார்.இந்தியாவுடன் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒப்பந்தத்திற்கமைவாக திருகோணமலை மாவட்டம் அபிவிருத்தி செய்யப்படும். அதேபோன்று மகாவெளி ஏ மற்றும் பி பிரிவின் கீழ் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக அவர் மேலும் கூறினார்.முன்னாள் அமைச்சர் கேடபிள்யு. தேவநாயகம், ஜேஆர் ஜயவர்தன மற்றும் நானும் சமகாலத்தில் அமைச்சரவையில் இருந்தவர்கள். அக்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தை மகாவெளி திட்டத்தின்கீழ் அபிவிருத்தி செய்வதற்கு முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் போர் காரணமாக தடைப்பட்டது. இதனால் மட்டக்களப்பு மாவட்டத்தை விரைவாக அபிவிருத்தி செய்வதற்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் விவசாயம், கடல் தொழில் மற்றும் உல்லாசப் பணத்துறை ஆகிய அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. விவசாயத்துறையில் நவீனத்துவம் உட்புகுத்தப்படும். பண்ணையாளர்களும் தினமும் பத்து தொடக்கம் 12 லீற்றர் பால் கறவைப்பசுக்கள் வழங்கப்படும். அதேபோன்று இலட்சக்கணக்கான உல்லாசப்பயணிகள் வரக்கூடிய பிரதேசமாக கிழக்கு மாகாணம் மாற்றப்படும்.செங்கலடி மத்திய கல்லூரி பல துறைகளில் முன்னேற்றம் கண்டுள்ளது. இங்கு சில வகையான நடனங்கள் அரங்கேற்றப்பட்ட போதிலும் மேற்கத்தேய நடனம் இருக்கவில்லை.  நான் அடுத்த முறை இங்கு வரும்போது மேற்கத்தேய நடனமும் அரங்கேற்றப்படவேண்டுமென எதிர்பார்க்கிறேன். இப்பாடசாலைக்கு நான் தொழில் நுட்ப கூடமொன்றை வழங்கவுள்ளேன் என்றார்.பாடசாலை அதிபர் குகதாசன் தலைமையில் நடைபெற்ற இவ் விழாவில் கிழக்கு  மாகாண ஆளுநர் செந்தில்; தொண்டமான், இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மற்றும் துறைசார் அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர். 

Advertisement

Advertisement

Advertisement