• May 03 2024

திருமலையில் மாடுகளால் ஏற்பட்ட கதி...! ஆறுபேர் வைத்தியசாலையில்...! நடந்தது என்ன? samugammedia

Sharmi / Jan 24th 2024, 2:07 pm
image

Advertisement

திருமலையில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் அறுவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரொட்டவெவ பகுதியில் இன்று(24)  காலை,  இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின் காரணமாக பெண்ணொருவர் உட்பட ஆறு பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் 28 தொடக்கம் 58 வயதுக்கு இடைப்பட்ட நபர்களே காயமடைந்துள்ளனர்.

மிரிஸ்வெவ பகுதியில் மேற்கொள்ளப்பட்டிருந்த சேனைப்பயிர்ச் செய்கைக்குள் மாடுகள் புகுந்து நாசமாக்கியுள்ளதாக சேனைப்பயிர் செய்கையாளர் மாட்டின் உரிமையாளரிடம் நட்டஈட்டை கோரியபோது ஏற்பட்ட வாக்குவாதத்தில் இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் பெண் ஒருவர் உட்பட ஆறுபேர் காயமடைந்த நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் பெண் ஒருவருடன் வயோதிபர் ஒருவரும் மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


திருமலையில் மாடுகளால் ஏற்பட்ட கதி. ஆறுபேர் வைத்தியசாலையில். நடந்தது என்ன samugammedia திருமலையில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் அறுவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரொட்டவெவ பகுதியில் இன்று(24)  காலை,  இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின் காரணமாக பெண்ணொருவர் உட்பட ஆறு பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.குறித்த சம்பவத்தில் 28 தொடக்கம் 58 வயதுக்கு இடைப்பட்ட நபர்களே காயமடைந்துள்ளனர்.மிரிஸ்வெவ பகுதியில் மேற்கொள்ளப்பட்டிருந்த சேனைப்பயிர்ச் செய்கைக்குள் மாடுகள் புகுந்து நாசமாக்கியுள்ளதாக சேனைப்பயிர் செய்கையாளர் மாட்டின் உரிமையாளரிடம் நட்டஈட்டை கோரியபோது ஏற்பட்ட வாக்குவாதத்தில் இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.இதனால் பெண் ஒருவர் உட்பட ஆறுபேர் காயமடைந்த நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் பெண் ஒருவருடன் வயோதிபர் ஒருவரும் மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement