• Oct 06 2024

யாழில் சிறுமியைத் தாக்கிய பங்குத் தந்தை...! நீதிமன்றத்தில் முற்படுத்துமாறு உத்தரவு...!samugammedia

Sharmi / Dec 6th 2023, 10:56 am
image

Advertisement

யாழில் தேவாலயத்திற்கு ஞாயிறு ஆராதனைக்கு செல்லவில்லை என தெரிவித்து சிறுமியொருவரை தாக்கிய பங்குத் தந்தையை நீதிமன்றில் முற்படுத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

யாழ் சாவகச்சேரியில் உள்ள தேவாலயத்திற்கு ஞாயிறு ஆராதனைக்கு செல்லவில்லை எனப் பங்குத் தந்தை ஒருவரால் தாக்கப்பட்ட சிறுமி சட்ட வைத்திய அதிகாரியின் மருத்துவச்
சான்றிதழுடன் நேற்றையதினம் சாவகச்சேரி நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். 

கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றின் பங்குத் தந்தையே இவ்வாறு சிறுமியைத் தாக்கினார் எனக் கூறப்படுகின்றது. 

இந்நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட சிறுமி நேற்றையதினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியினால் பரிசோதிக்கப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

சிறுமியின் உடலில் அடி காயத் தழும்புகள் உள்ளமையால் சிறுமியைத் தாக்கினார் எனக் குற்றஞ் சாட்டப்படும் பங்குத் தந்தையை இன்று மன்றில் முற்படுத்துமாறு பொலிஸாருக்கு சாவகச்சேரி
நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யாழில் சிறுமியைத் தாக்கிய பங்குத் தந்தை. நீதிமன்றத்தில் முற்படுத்துமாறு உத்தரவு.samugammedia யாழில் தேவாலயத்திற்கு ஞாயிறு ஆராதனைக்கு செல்லவில்லை என தெரிவித்து சிறுமியொருவரை தாக்கிய பங்குத் தந்தையை நீதிமன்றில் முற்படுத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.யாழ் சாவகச்சேரியில் உள்ள தேவாலயத்திற்கு ஞாயிறு ஆராதனைக்கு செல்லவில்லை எனப் பங்குத் தந்தை ஒருவரால் தாக்கப்பட்ட சிறுமி சட்ட வைத்திய அதிகாரியின் மருத்துவச்சான்றிதழுடன் நேற்றையதினம் சாவகச்சேரி நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றின் பங்குத் தந்தையே இவ்வாறு சிறுமியைத் தாக்கினார் எனக் கூறப்படுகின்றது. இந்நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட சிறுமி நேற்றையதினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியினால் பரிசோதிக்கப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.சிறுமியின் உடலில் அடி காயத் தழும்புகள் உள்ளமையால் சிறுமியைத் தாக்கினார் எனக் குற்றஞ் சாட்டப்படும் பங்குத் தந்தையை இன்று மன்றில் முற்படுத்துமாறு பொலிஸாருக்கு சாவகச்சேரிநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement