• Nov 23 2024

2024 ஆம் ஆண்டின் முதலாவது சந்திரகிரகணம் நாளைய தினம்..!!

Tamil nila / Mar 24th 2024, 7:51 pm
image

2024 ஆம் ஆண்டின் முதலாவது சந்திரகிரகணம் நாளைய தினம் அதாவது மார்ச் 25 ஆம் திகதி நிகழவுள்ளது.

நாளை பங்குனி உத்திரமும் கொண்டாடப்படுகிறது. பங்குனி உத்திரத்தில் சந்திர கிரகணம் 100 ஆண்டுகளுக்கு பின் வருகிறது. 

அதுமட்டுமின்றி நாளை ஹோலி பண்டிகையும் கொண்டாடப்படுகிறது. இதனால் நாளை வரும் சந்திர கிரகணம் கூடுதல் சிறப்பு வாய்ந்தது.

மேலும் சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும்போது கிரகணம் ஏற்படுகிறது.

சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும் நிலையில், சூரியனின் நேரடிக் கதிர்கள் சந்திரனை ஒளிரவிடாமல் தடுக்கும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது.

நாளை வரும் சந்திர கிரகணம் இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் ஆகும். இந்த சந்திர கிரகண நிகழ்வானது காலை 10:23 மணிக்கு தொடங்கி மாலை 4:39 மணிக்கு முடிவடைகிறது.

பொதுவாக கிரகணத்தின் போது பல்வேறு விஷயங்கள் கடைபிடிக்கப்படும். நம் முன்னோர் காலம் முதல் அது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சந்திர கிரகணத்தின் போது சாமி சிலையை தொடக்கூடாது. கோயிலுக்குள் நுழையக்கூடாது.

குறிப்பாக கருவுற்ற பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளது. கிரகணத்தின் போது வெளிப்படும் கதிர்வீச்சுக்கள் உடல் மற்றும் மன ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தும் என அறிவியல் ரீதியாக கூறப்படுகிறது.

ஆன்மீக காரணமும் உள்ளது. கிரகணத்தின் போது வெளிப்படும் கதிர்வீச்சு காரணமாக வயிற்றில் இருக்கும் கருவுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படும் என்பதால் வெளியே செல்லக்கூடாது என பெரியவர்கள் கூறுகின்றனர்.

அதே போல் பொதுவான விஷயமான கிரகண நேரத்தில் சாப்பிடாமல் இருப்பது சிறந்தது. கிரகண நேரத்தில் பயணங்கள் மேற்கொள்வது தவிர்க்க வேண்டும். கிரகணம் முடிந்த பின் குளிக்க வேண்டும்,  இது கதிர்வீச்சு தாக்கத்தை குறைக்கும்.


2024 ஆம் ஆண்டின் முதலாவது சந்திரகிரகணம் நாளைய தினம். 2024 ஆம் ஆண்டின் முதலாவது சந்திரகிரகணம் நாளைய தினம் அதாவது மார்ச் 25 ஆம் திகதி நிகழவுள்ளது.நாளை பங்குனி உத்திரமும் கொண்டாடப்படுகிறது. பங்குனி உத்திரத்தில் சந்திர கிரகணம் 100 ஆண்டுகளுக்கு பின் வருகிறது. அதுமட்டுமின்றி நாளை ஹோலி பண்டிகையும் கொண்டாடப்படுகிறது. இதனால் நாளை வரும் சந்திர கிரகணம் கூடுதல் சிறப்பு வாய்ந்தது.மேலும் சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும்போது கிரகணம் ஏற்படுகிறது.சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும் நிலையில், சூரியனின் நேரடிக் கதிர்கள் சந்திரனை ஒளிரவிடாமல் தடுக்கும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது.நாளை வரும் சந்திர கிரகணம் இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் ஆகும். இந்த சந்திர கிரகண நிகழ்வானது காலை 10:23 மணிக்கு தொடங்கி மாலை 4:39 மணிக்கு முடிவடைகிறது.பொதுவாக கிரகணத்தின் போது பல்வேறு விஷயங்கள் கடைபிடிக்கப்படும். நம் முன்னோர் காலம் முதல் அது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சந்திர கிரகணத்தின் போது சாமி சிலையை தொடக்கூடாது. கோயிலுக்குள் நுழையக்கூடாது.குறிப்பாக கருவுற்ற பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளது. கிரகணத்தின் போது வெளிப்படும் கதிர்வீச்சுக்கள் உடல் மற்றும் மன ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தும் என அறிவியல் ரீதியாக கூறப்படுகிறது.ஆன்மீக காரணமும் உள்ளது. கிரகணத்தின் போது வெளிப்படும் கதிர்வீச்சு காரணமாக வயிற்றில் இருக்கும் கருவுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படும் என்பதால் வெளியே செல்லக்கூடாது என பெரியவர்கள் கூறுகின்றனர்.அதே போல் பொதுவான விஷயமான கிரகண நேரத்தில் சாப்பிடாமல் இருப்பது சிறந்தது. கிரகண நேரத்தில் பயணங்கள் மேற்கொள்வது தவிர்க்க வேண்டும். கிரகணம் முடிந்த பின் குளிக்க வேண்டும்,  இது கதிர்வீச்சு தாக்கத்தை குறைக்கும்.

Advertisement

Advertisement

Advertisement