• May 03 2024

கால்பந்து ஜாம்பவானின் 60 வருட சாதனையை முறையடித்த பிரான்ஸ் வீரர்!

crownson / Dec 6th 2022, 10:00 am
image

Advertisement

வேகமாக ஓடுபவர் யார்?... ஹூசைன் போல்டா? அல்லது பிரான்ஸ் கால்பந்து வீரர் எம்மாப்பேவா என விளையாட்டு உலகில் விவாதங்கள் எழுந்தது கூட உண்டு.

கால்பந்து மைதானத்தில் அவ்வளவு வேகமாக ஓடுபவர் பிரான்ஸ் வீரர் எம்மாப்பே.

2018 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் டீன் ஏஜ் வீரராக களம் கண்டு, தற்போது கட்டார் உலகக் கோப்பையிலும் அசத்தி வருகிறார்.

போலந்துக்கு எதிரான போட்டியில் இரு கோல்கள் அடித்ததன் மூலம் நடப்பு உலகக் கோப்பையில் 5கோல்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார்.   

இரு உலகக் கோப்பையில் மட்டுமே விளையாடியுள்ள எம்மாப்பே இதுவரை 9 கோல்கள் அடித்துள்ளார்.

24 வயதுக்குள் உலகக் கோப்பையில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற 60 ஆண்டு கால பீலேவின் சாதனையை எம்மாப்பே தகர்த்துள்ளார்.

ஜெர்மனியைச் சேர்ந்த குலோஸ் (Klose) உலகக் கோப்பை கால்பந்து தொடரில் 16 கோல்கள் அடித்து, அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை கொண்டுள்ளார்.

குறைந்தபட்சம் இன்னும் 3 உலகக் கோப்பைகளில் எம்மாப்பே விளையாட வாய்ப்பு உள்ள நிலையில், குலோஸிசின் சாதனையையும் அவர் முறியடிப்பார், எனவும் கால்பந்து ரசிகர்கள் நம்புகின்றனர்.

கால்பந்து ஜாம்பவானின் 60 வருட சாதனையை முறையடித்த பிரான்ஸ் வீரர் வேகமாக ஓடுபவர் யார். ஹூசைன் போல்டா அல்லது பிரான்ஸ் கால்பந்து வீரர் எம்மாப்பேவா என விளையாட்டு உலகில் விவாதங்கள் எழுந்தது கூட உண்டு.கால்பந்து மைதானத்தில் அவ்வளவு வேகமாக ஓடுபவர் பிரான்ஸ் வீரர் எம்மாப்பே.2018 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் டீன் ஏஜ் வீரராக களம் கண்டு, தற்போது கட்டார் உலகக் கோப்பையிலும் அசத்தி வருகிறார். போலந்துக்கு எதிரான போட்டியில் இரு கோல்கள் அடித்ததன் மூலம் நடப்பு உலகக் கோப்பையில் 5கோல்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார்.   இரு உலகக் கோப்பையில் மட்டுமே விளையாடியுள்ள எம்மாப்பே இதுவரை 9 கோல்கள் அடித்துள்ளார். 24 வயதுக்குள் உலகக் கோப்பையில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற 60 ஆண்டு கால பீலேவின் சாதனையை எம்மாப்பே தகர்த்துள்ளார்.ஜெர்மனியைச் சேர்ந்த குலோஸ் (Klose) உலகக் கோப்பை கால்பந்து தொடரில் 16 கோல்கள் அடித்து, அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை கொண்டுள்ளார். குறைந்தபட்சம் இன்னும் 3 உலகக் கோப்பைகளில் எம்மாப்பே விளையாட வாய்ப்பு உள்ள நிலையில், குலோஸிசின் சாதனையையும் அவர் முறியடிப்பார், எனவும் கால்பந்து ரசிகர்கள் நம்புகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement