• May 09 2024

முஸ்லிம்களின் வாக்குகளுக்காகவே நல்லாட்சி அரசு குண்டுத்தாக்குதலை தடுக்கவில்லை! - சரத் வீரசேகர பகிரங்க குற்றச்சாட்டு samugammedia

Chithra / Sep 23rd 2023, 8:27 am
image

Advertisement

பயங்கரவாதி சஹ்ரானின் அடிப்படைவாத செயற்பாடுகள் தொடர்பில் 200 அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டும் சஹ்ரான் கைது செய்யப்படவில்லை. முஸ்லிம்களின் வாக்குகளை இழக்க கூடாது என்பதற்காகவே நல்லாட்சி அரசாங்கம் குண்டுத்தாக்குதலை தடுக்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம்இ தேசிய பாதுகாப்பு தொடர்பான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இஸ்லாமிய அடிப்படைவாதியான பயங்கரவாதி சஹ்ரான் மீதும் அவரது தரப்பினர் மீதும் கடும் வைராக்கியம் எமக்குள்ளது. 

அதே போல் குண்டுத்தாக்குதலுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் ஒத்துழைப்பு வழங்கியவர்கள் மீதும் கடும் வைராக்கியம் உள்ளது.

சிறுபான்மையினத்தவரின் வாக்குகளுக்காகவே நல்லாட்சி அரசாங்கம் குண்டுத்தாக்குதலை தடுக்கவில்லை.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்கல் இடம்பெறுவதற்கு முன் 2019.04.20 ஆம் திகதி பயங்கரவாதி சஹ்ரான் உறுதி பிரமாணம் செய்து அதனை 28 நிமிட காணொளியில் பதிவு செய்துள்ளார்.

சஹ்ரான் உட்பட அடிப்படைவாதிகள் தமது உறுதிமொழியில் எவ்விடத்திலும் கோட்டபய ராஜபக்ஷவை ஆட்சிக்கு கொண்டு வர தாம் தமது உயிரை தியாகம் செய்வதாக குறிப்பிடவில்லை.

மத மாரக்கத்துக்காகவே இஸ்லாம் அடிப்படைவாதிகள் தற்கொலை குண்டுதாரிகளாக மாறினார்கள்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்துவது பயனற்றது,

எனெனில் இரண்டு சர்வதேச மட்டத்திலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தமது குறைகளை மறைத்துக் கொள்வதற்காகவே 2019 ஆம் ஆண்டு  காலப்பகுதியில் ஆட்சியில் இருந்த தற்போதைய எதிர்க்கட்சிகள் சர்வதேச விசாரணைகளை கோருகிறார்கள் என்றார்.

முஸ்லிம்களின் வாக்குகளுக்காகவே நல்லாட்சி அரசு குண்டுத்தாக்குதலை தடுக்கவில்லை - சரத் வீரசேகர பகிரங்க குற்றச்சாட்டு samugammedia பயங்கரவாதி சஹ்ரானின் அடிப்படைவாத செயற்பாடுகள் தொடர்பில் 200 அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டும் சஹ்ரான் கைது செய்யப்படவில்லை. முஸ்லிம்களின் வாக்குகளை இழக்க கூடாது என்பதற்காகவே நல்லாட்சி அரசாங்கம் குண்டுத்தாக்குதலை தடுக்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம்இ தேசிய பாதுகாப்பு தொடர்பான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.இஸ்லாமிய அடிப்படைவாதியான பயங்கரவாதி சஹ்ரான் மீதும் அவரது தரப்பினர் மீதும் கடும் வைராக்கியம் எமக்குள்ளது. அதே போல் குண்டுத்தாக்குதலுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் ஒத்துழைப்பு வழங்கியவர்கள் மீதும் கடும் வைராக்கியம் உள்ளது.சிறுபான்மையினத்தவரின் வாக்குகளுக்காகவே நல்லாட்சி அரசாங்கம் குண்டுத்தாக்குதலை தடுக்கவில்லை.உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்கல் இடம்பெறுவதற்கு முன் 2019.04.20 ஆம் திகதி பயங்கரவாதி சஹ்ரான் உறுதி பிரமாணம் செய்து அதனை 28 நிமிட காணொளியில் பதிவு செய்துள்ளார்.சஹ்ரான் உட்பட அடிப்படைவாதிகள் தமது உறுதிமொழியில் எவ்விடத்திலும் கோட்டபய ராஜபக்ஷவை ஆட்சிக்கு கொண்டு வர தாம் தமது உயிரை தியாகம் செய்வதாக குறிப்பிடவில்லை.மத மாரக்கத்துக்காகவே இஸ்லாம் அடிப்படைவாதிகள் தற்கொலை குண்டுதாரிகளாக மாறினார்கள்.உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்துவது பயனற்றது,எனெனில் இரண்டு சர்வதேச மட்டத்திலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.தமது குறைகளை மறைத்துக் கொள்வதற்காகவே 2019 ஆம் ஆண்டு  காலப்பகுதியில் ஆட்சியில் இருந்த தற்போதைய எதிர்க்கட்சிகள் சர்வதேச விசாரணைகளை கோருகிறார்கள் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement