• May 20 2024

என்னையும் படுகொலை செய்யும் நிலைப்பாட்டில் தான் பயங்கரவாதி சஹ்ரான் இருந்தான்! - சம்பிக்க பரபரப்புத் தகவல் samugammedia

Chithra / Sep 23rd 2023, 9:23 am
image

Advertisement

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலுக்கு பின்னர் அடிப்படைவாத கொள்கையுடைய பல அமைப்புக்களை அரசாங்கம் தடை செய்தது. ஆனால் அண்மையில் ஒரு சில அமைப்புக்கள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது. அடிப்படைவாத கொள்கையுடைய அமைப்புக்களை அலட்சியப்படுத்த கூடாது என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தேசிய பாதுகாப்பு தொடர்பான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

என்னையும் படுகொலை செய்யும் நிலைப்பாட்டில் தான் பயங்கரவாதி சஹ்ரான் இருந்தான். 

பயங்கரவாதி சஹ்ரான் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு சாட்சியமளிக்கையில் பல விடயங்களை நான் குறிப்பிட்டேன். 

ஆனால் ஆணைக்குழுவின் அறிக்கையில் நான்  வழங்கிய சாட்சியங்கள் உள்ளடக்கப்படவில்லை.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குல் சம்பவம் தொடர்பில் அன்ஷிப் அசாத் மௌலானா என்பவர் சனல் 4 தொலைக்காட்சிக்கும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விசாரணைக்கு சாட்சியம் வழங்கியுள்ள பின்னணியில் தான் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

பயங்கரவாதி சஹ்ரான் தவறான மத மார்க்கத்தால் ஈர்க்கப்பட்டு மத வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இதனை பாதுகாப்பு தரப்பினர் பொருட்படுத்தவில்லை.

இதன் விளையே உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல். 

சஹ்ரானுக்கும், புலனாய்வு பிரிவு மற்றும் பாதுகாப்பு தரப்புக்கு இடையில் தொடர்பிருந்தது என்பதை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட பாதுகாப்பு தரப்பினர் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். இதை மறுக்க முடியாது.

பயங்கரவாதி சஹ்ரானுடன் தொடர்புடைய தரப்பினர் தென்னிந்தியாவில் உள்ளார்கள். கடந்த ஆண்டு தென்னிந்தியாவில் கோயம்புத்தூர் பகுதியில் சஹ்ரான் தரப்புடன் தொடர்புடையவர்கள் குண்டுத்தாக்குதலை மேற்கொண்டார்கள். ஆகவே பிரச்சினை இன்றும் முடிவடையவில்லை. என்றார்.


என்னையும் படுகொலை செய்யும் நிலைப்பாட்டில் தான் பயங்கரவாதி சஹ்ரான் இருந்தான் - சம்பிக்க பரபரப்புத் தகவல் samugammedia உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலுக்கு பின்னர் அடிப்படைவாத கொள்கையுடைய பல அமைப்புக்களை அரசாங்கம் தடை செய்தது. ஆனால் அண்மையில் ஒரு சில அமைப்புக்கள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது. அடிப்படைவாத கொள்கையுடைய அமைப்புக்களை அலட்சியப்படுத்த கூடாது என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தேசிய பாதுகாப்பு தொடர்பான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.என்னையும் படுகொலை செய்யும் நிலைப்பாட்டில் தான் பயங்கரவாதி சஹ்ரான் இருந்தான். பயங்கரவாதி சஹ்ரான் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு சாட்சியமளிக்கையில் பல விடயங்களை நான் குறிப்பிட்டேன். ஆனால் ஆணைக்குழுவின் அறிக்கையில் நான்  வழங்கிய சாட்சியங்கள் உள்ளடக்கப்படவில்லை.உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குல் சம்பவம் தொடர்பில் அன்ஷிப் அசாத் மௌலானா என்பவர் சனல் 4 தொலைக்காட்சிக்கும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விசாரணைக்கு சாட்சியம் வழங்கியுள்ள பின்னணியில் தான் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.பயங்கரவாதி சஹ்ரான் தவறான மத மார்க்கத்தால் ஈர்க்கப்பட்டு மத வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இதனை பாதுகாப்பு தரப்பினர் பொருட்படுத்தவில்லை.இதன் விளையே உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல். சஹ்ரானுக்கும், புலனாய்வு பிரிவு மற்றும் பாதுகாப்பு தரப்புக்கு இடையில் தொடர்பிருந்தது என்பதை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட பாதுகாப்பு தரப்பினர் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். இதை மறுக்க முடியாது.பயங்கரவாதி சஹ்ரானுடன் தொடர்புடைய தரப்பினர் தென்னிந்தியாவில் உள்ளார்கள். கடந்த ஆண்டு தென்னிந்தியாவில் கோயம்புத்தூர் பகுதியில் சஹ்ரான் தரப்புடன் தொடர்புடையவர்கள் குண்டுத்தாக்குதலை மேற்கொண்டார்கள். ஆகவே பிரச்சினை இன்றும் முடிவடையவில்லை. என்றார்.

Advertisement

Advertisement

Advertisement