• Jan 26 2025

சீன வைரஸ் குறித்து அரசு விழிப்புடன் உள்ளது! - சுகாதார அமைச்சர் தெரிவிப்பு

Chithra / Jan 9th 2025, 11:52 am
image

 

தற்போது சீனா முழுவதும் பரவி வரும் HMPV வைரஸ் குறித்து நாட்டில் இதுவரைக்கும் எந்த பதிவும் இல்லை எனவும் அரசாங்கம் மிகவும் விழிப்புடன் இருப்பதாகவும் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்திருந்தார்.

நாடாளுமன்றில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;

இதுவரைக்கும் 2025ம் ஆண்டுக்கு HMPV தொற்று பதிவுகள் எதுவும் அடையாளம் காணப்படவில்லை. 

ஒரு நோயாளர் மீது சந்தேகம் நிலவிய நிலையில், அது குறித்த பரிசோதனைகளில் தொற்று உறுதியாகவில்லை.

அதற்கு மாறாக இதற்கு முன்னரான காலப்பகுதிகளில் இந்த வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். 

அதனையே புதிய தொற்றாக வர்ணித்து உண்மைக்கு புறம்பான செய்திகளை சமூக ஊடகங்கள் மற்றும் செய்திச் சேவைகள் நேற்றைய தினம் பிரசுரித்திருந்தது. 

இவ்வாறான கீழ்த்தரமான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என ஊடகங்களிடம் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

சீன வைரஸ் குறித்து அரசு விழிப்புடன் உள்ளது - சுகாதார அமைச்சர் தெரிவிப்பு  தற்போது சீனா முழுவதும் பரவி வரும் HMPV வைரஸ் குறித்து நாட்டில் இதுவரைக்கும் எந்த பதிவும் இல்லை எனவும் அரசாங்கம் மிகவும் விழிப்புடன் இருப்பதாகவும் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்திருந்தார்.நாடாளுமன்றில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;இதுவரைக்கும் 2025ம் ஆண்டுக்கு HMPV தொற்று பதிவுகள் எதுவும் அடையாளம் காணப்படவில்லை. ஒரு நோயாளர் மீது சந்தேகம் நிலவிய நிலையில், அது குறித்த பரிசோதனைகளில் தொற்று உறுதியாகவில்லை.அதற்கு மாறாக இதற்கு முன்னரான காலப்பகுதிகளில் இந்த வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அதனையே புதிய தொற்றாக வர்ணித்து உண்மைக்கு புறம்பான செய்திகளை சமூக ஊடகங்கள் மற்றும் செய்திச் சேவைகள் நேற்றைய தினம் பிரசுரித்திருந்தது. இவ்வாறான கீழ்த்தரமான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என ஊடகங்களிடம் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement