• May 04 2024

அரசு ஜனநாயகக் கொலை செய்கின்றது – தேர்தல் அச்சமே காரணம்! - ரவூப் ஹக்கீம்

Chithra / Jan 11th 2023, 10:24 am
image

Advertisement

தேர்தலுக்கான கட்டுப்பணத்தை எந்தக்கட்சியிடம் இருந்தும் பெற்றுக்கொள்ள வேண்டாமென அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இது ஜனநாயக சக்திகளுக்கும் மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடகசந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

அமைச்சரவை தீர்மானம் ஒன்றை அடிப்படையாக வைத்து அனைத்து அரச அதிபர்களுக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த கடிதத்தில் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை எந்தக்கட்சியிடம் இருந்தும் பெற்றுக்கொள்ள வேண்டாமென அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என்றும் தேர்தலை எதிர் பார்த்து காத்திருக்கும் அனைத்து ஜனநாயக சக்திகளுக்கும் மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நடவடிக்கையானது அரசாங்கத்தின் மிக மோசமான நடவடிக்கை என்றும் இதன் விளக்கத்தையும் தாம் பெற்றுக்கொள்ள இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன் ஜனாதிபதியும் அரசாங்கமும் தேர்தலுக்கு முகம் கொடுக்க  அச்சப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அரசு ஜனநாயகக் கொலை செய்கின்றது – தேர்தல் அச்சமே காரணம் - ரவூப் ஹக்கீம் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை எந்தக்கட்சியிடம் இருந்தும் பெற்றுக்கொள்ள வேண்டாமென அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இது ஜனநாயக சக்திகளுக்கும் மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.நேற்று இடம்பெற்ற ஊடகசந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.அமைச்சரவை தீர்மானம் ஒன்றை அடிப்படையாக வைத்து அனைத்து அரச அதிபர்களுக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த கடிதத்தில் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை எந்தக்கட்சியிடம் இருந்தும் பெற்றுக்கொள்ள வேண்டாமென அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டிருந்தார்.அத்துடன் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என்றும் தேர்தலை எதிர் பார்த்து காத்திருக்கும் அனைத்து ஜனநாயக சக்திகளுக்கும் மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்த நடவடிக்கையானது அரசாங்கத்தின் மிக மோசமான நடவடிக்கை என்றும் இதன் விளக்கத்தையும் தாம் பெற்றுக்கொள்ள இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.அத்துடன் ஜனாதிபதியும் அரசாங்கமும் தேர்தலுக்கு முகம் கொடுக்க  அச்சப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement