• May 17 2024

பொருளாதாரம் சீராகி வருவதாக அரசாங்கம் கூறுவது அப்பட்டமான பொய் - வருமானங்களை இழந்துள்ள மக்கள்.! samugammedia

Tamil nila / Jun 14th 2023, 5:34 pm
image

Advertisement

இலங்கையிலுள்ள சிறு தேயிலை உற்பத்தியாளர்கள், இன்று பாரிய அளவிலான பிரச்சனைகளுக்கு, முகம் கொடுத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்ஜய பெரேரா கவலை வெளியிட்டுள்ளார்.

கடந்த 12ஆம் திகதி எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

அதாவது சிறு தேயிலை உற்பத்தியாளர்களிற்கு, குறைவான வருமானமே கிடைக்கின்றது.

டொலர் விலை குறைந்துள்ளதாகவும் ரூபாயின் மதிப்பு உயர்ந்தமையே இவ்வாறு உற்பத்தி அளவு குறைந்ததாக அரசாங்கம் கூறுகின்றது.

ஆனால் விவசாயிகளுக்கு போதியளவு உரம் வழங்கப்படவில்லை என்பதே எனது குற்றச்சாட்டு.

அது மட்டுமல்ல தேயிலை உற்பத்திக்கு தேவையான, கிருமி நாசினியின் விலை மிக முக்கியமான ஒரு காரணியாகும்.ஆனால் அவைகளின் விலைகளிலும் உயர்வு ஏற்பட்டுள்ளது. இந்நேரத்தில் நாங்கள் அரசாங்கத்திற்கு கூறுவது  சரியான முறையில் உரங்கள் வழங்குங்கள். நெற் பயிர் செய்கைக்கும் உரம் மிகவும் அவசியம். 

அதேபோல வரி விதிப்பு குறித்து சற்று சிந்தித்து பார்க்க வேண்டும். 

மின்சார கட்டணம் அதிகரித்த நிலையில் தேயிலைத் தொழிற்சாலையை நடத்தி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தேயிலையை சரியான முறையில் சந்தை படுத்த முடியாத நிலையும் தற்போது காணப்படுகிறது. 

பொருளாதார சீராகி வருவதாக அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் அவ்வாறு இல்லை  அரசாங்கம் எந்த ஒரு அபிவிருத்தியும் செய்து கொள்ள முடியாத நிலையிலேயே  காணப்படுகிறது.

பொருளாதாரம் சீராகி வருவதாக அரசாங்கம் கூறுவது அப்பட்டமான பொய் - வருமானங்களை இழந்துள்ள மக்கள். samugammedia இலங்கையிலுள்ள சிறு தேயிலை உற்பத்தியாளர்கள், இன்று பாரிய அளவிலான பிரச்சனைகளுக்கு, முகம் கொடுத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்ஜய பெரேரா கவலை வெளியிட்டுள்ளார்.கடந்த 12ஆம் திகதி எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.அதாவது சிறு தேயிலை உற்பத்தியாளர்களிற்கு, குறைவான வருமானமே கிடைக்கின்றது.டொலர் விலை குறைந்துள்ளதாகவும் ரூபாயின் மதிப்பு உயர்ந்தமையே இவ்வாறு உற்பத்தி அளவு குறைந்ததாக அரசாங்கம் கூறுகின்றது.ஆனால் விவசாயிகளுக்கு போதியளவு உரம் வழங்கப்படவில்லை என்பதே எனது குற்றச்சாட்டு.அது மட்டுமல்ல தேயிலை உற்பத்திக்கு தேவையான, கிருமி நாசினியின் விலை மிக முக்கியமான ஒரு காரணியாகும்.ஆனால் அவைகளின் விலைகளிலும் உயர்வு ஏற்பட்டுள்ளது. இந்நேரத்தில் நாங்கள் அரசாங்கத்திற்கு கூறுவது  சரியான முறையில் உரங்கள் வழங்குங்கள். நெற் பயிர் செய்கைக்கும் உரம் மிகவும் அவசியம். அதேபோல வரி விதிப்பு குறித்து சற்று சிந்தித்து பார்க்க வேண்டும். மின்சார கட்டணம் அதிகரித்த நிலையில் தேயிலைத் தொழிற்சாலையை நடத்தி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.தேயிலையை சரியான முறையில் சந்தை படுத்த முடியாத நிலையும் தற்போது காணப்படுகிறது. பொருளாதார சீராகி வருவதாக அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் அவ்வாறு இல்லை  அரசாங்கம் எந்த ஒரு அபிவிருத்தியும் செய்து கொள்ள முடியாத நிலையிலேயே  காணப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement