• May 17 2024

இரண்டு நாட்களில் யால தேசிய பூங்காவில் கிடைத்த பெருந்தொகை வருமானம்

Chithra / Dec 8th 2022, 10:55 am
image

Advertisement


கடந்த நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 5 ஆம் திகதிகளில் யால தேசிய பூங்காவிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் மூலம் வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் கிட்டத்தட்ட 16 மில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளது.

“மெயின் ஷிஃப் 5” மற்றும் அசமரா குவெஸ்ட் ஆகிய இரண்டு சொகுசு கப்பல்களில் வெளிநாட்டு பிரஜைகள் நாட்டிற்கு வந்ததாக வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

நவம்பர் 30 ஆம் திகதி 6.2 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வருமானம் ஈட்டப்பட்டதாகவும், டிசம்பர் 5 ஆம் திகதி வெளிநாட்டு பிரஜைகளின் வருகையுடன் 9.8 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில்,யால பூங்காவில் நுழைவு டிக்கெட்டுகளை கொள்வனவு செய்ய பார்வையாளர்கள் நீண்ட வரிசையில் நிற்க வேண்டியிருந்தது.

இதனையடுத்து, வருகை நேரத்தை நீடிக்குமாறு வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.

யால தேசிய பூங்காவிற்கு அதிகளவான வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வருகை தருவார்கள் என அதிகாரிகள் அறிந்தால், மேலதிக டிக்கெட் கருமபீடங்களை திறந்து வைக்குமாறும் அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

இரண்டு நாட்களில் யால தேசிய பூங்காவில் கிடைத்த பெருந்தொகை வருமானம் கடந்த நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 5 ஆம் திகதிகளில் யால தேசிய பூங்காவிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் மூலம் வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் கிட்டத்தட்ட 16 மில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளது.“மெயின் ஷிஃப் 5” மற்றும் அசமரா குவெஸ்ட் ஆகிய இரண்டு சொகுசு கப்பல்களில் வெளிநாட்டு பிரஜைகள் நாட்டிற்கு வந்ததாக வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.நவம்பர் 30 ஆம் திகதி 6.2 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வருமானம் ஈட்டப்பட்டதாகவும், டிசம்பர் 5 ஆம் திகதி வெளிநாட்டு பிரஜைகளின் வருகையுடன் 9.8 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.இதற்கிடையில்,யால பூங்காவில் நுழைவு டிக்கெட்டுகளை கொள்வனவு செய்ய பார்வையாளர்கள் நீண்ட வரிசையில் நிற்க வேண்டியிருந்தது.இதனையடுத்து, வருகை நேரத்தை நீடிக்குமாறு வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.யால தேசிய பூங்காவிற்கு அதிகளவான வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வருகை தருவார்கள் என அதிகாரிகள் அறிந்தால், மேலதிக டிக்கெட் கருமபீடங்களை திறந்து வைக்குமாறும் அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement