• Nov 19 2024

மனைவி கண்முன்னே சுட்டு கொல்லப்பட்ட கணவன் -திருமணம் நடந்து ஒரு மாதத்தின் பின்னர் இடம்பெற்ற கோரம்!

Anaath / Jul 21st 2024, 5:57 pm
image

மனைவி கண்முன்னே கணவன் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, 

இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்தவர்  கவின் தசூர். 29 வயதுடைய இவர்  கவின் 2016 முதல் அமெரிக்காவில் வசித்து வந்தார். 2018 இல் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் டிப்ளமோ முடித்த பிறகு, சொந்தமாக டிராவல்ஸ் நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார்.

இதனிடையே, மெக்சிகன் வம்சாவளியைச் சேர்ந்த சிந்தியா என்ற பெண்ணை கடந்த ஜூன் மாதம் 29 ஆம் திகதி திருமணம் செய்துகொண்டார். 

கடந்த 16 ஆம் திகதி குடும்பத்துடன் வெளியே சென்றிருந்த கவின், மீண்டும் வீட்டுக்கு தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, முந்தி செல்வது தொடர்பாக லொரி டிரைவருக்கும், கவினுக்கும் இடையே தகராறு ஏற்பட்ட்ட நிலையில் லொரி  டிரைவர், கவின் மீது அவரது மனைவி கண்முன்னே துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இதில் கவின் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த பொலிஸார்  வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, பொலிஸார் விசாரணை குறித்து குற்றம் சாட்டிய குடும்பத்தினர், லொரி டிரைவருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்றும் கவினுக்கு நீதி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன்,  ஜூலை 29 ஆம் திகதி கவின் இந்தியா திரும்புவார் என்று குடும்பத்தினர் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், இப்போது அவரது தாயார் கவினின் சாம்பலை எடுத்துக்கொண்டு ஆக்ராவுக்குத் திரும்புவார் எனவும் குடும்பத்தினர் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.

மனைவி கண்முன்னே சுட்டு கொல்லப்பட்ட கணவன் -திருமணம் நடந்து ஒரு மாதத்தின் பின்னர் இடம்பெற்ற கோரம் மனைவி கண்முன்னே கணவன் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்தவர்  கவின் தசூர். 29 வயதுடைய இவர்  கவின் 2016 முதல் அமெரிக்காவில் வசித்து வந்தார். 2018 இல் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் டிப்ளமோ முடித்த பிறகு, சொந்தமாக டிராவல்ஸ் நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார்.இதனிடையே, மெக்சிகன் வம்சாவளியைச் சேர்ந்த சிந்தியா என்ற பெண்ணை கடந்த ஜூன் மாதம் 29 ஆம் திகதி திருமணம் செய்துகொண்டார். கடந்த 16 ஆம் திகதி குடும்பத்துடன் வெளியே சென்றிருந்த கவின், மீண்டும் வீட்டுக்கு தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, முந்தி செல்வது தொடர்பாக லொரி டிரைவருக்கும், கவினுக்கும் இடையே தகராறு ஏற்பட்ட்ட நிலையில் லொரி  டிரைவர், கவின் மீது அவரது மனைவி கண்முன்னே துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இதில் கவின் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த பொலிஸார்  வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, பொலிஸார் விசாரணை குறித்து குற்றம் சாட்டிய குடும்பத்தினர், லொரி டிரைவருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்றும் கவினுக்கு நீதி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.அத்துடன்,  ஜூலை 29 ஆம் திகதி கவின் இந்தியா திரும்புவார் என்று குடும்பத்தினர் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், இப்போது அவரது தாயார் கவினின் சாம்பலை எடுத்துக்கொண்டு ஆக்ராவுக்குத் திரும்புவார் எனவும் குடும்பத்தினர் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement