• Sep 23 2024

யாழில் அந்தியேட்டி கிரியை நடைபெறவிருந்த வீட்டில் நடந்த சம்பவம்..! அதிர்ச்சியில் குடும்பத்தினர்..! samugammedia

Chithra / Nov 5th 2023, 12:57 pm
image

Advertisement

 

யாழ்ப்பாணம் – இணுவில் பகுதியில் வீடொன்றில் 135 பவுணுக்கும் அதிகமான தங்க நகைகள் திருட்டுப் போயுள்ளது.

கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, இணுவில், மஞ்சத்தடி பகுதியில் உள்ள வீடொன்றிலேயே நகைகள் திருட்டு போயுள்ளது.

அந்த வீட்டில் அந்தியேட்டி கிரியை நடைபெறவிருந்த நிலையிலேயே குறித்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இன்று அதிகாலை மூன்று மணியளவில் சமையல் வேலைக்காக எழுந்த குடும்பத்தினர் சார்ஜ் போடுவதற்கு கையடக்க தொலைபேசியை தேடிய போது அதனை காணவில்லை. இந்நிலையில்  அலுமாரி மற்றும் கதவு திறந்த நிலையில் காணப்பட்டுள்ளது.

பின்னர் நகைகளை பார்த்த போதே நகைகள் திருட்டு போயுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த குடும்பத்துடன் தொடர்புடைய யாரோ அல்லது இரகசியமாக நுழைந்த யாரோ திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாண பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு, கோப்பாய் பொலிஸார் ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


யாழில் அந்தியேட்டி கிரியை நடைபெறவிருந்த வீட்டில் நடந்த சம்பவம். அதிர்ச்சியில் குடும்பத்தினர். samugammedia  யாழ்ப்பாணம் – இணுவில் பகுதியில் வீடொன்றில் 135 பவுணுக்கும் அதிகமான தங்க நகைகள் திருட்டுப் போயுள்ளது.கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, இணுவில், மஞ்சத்தடி பகுதியில் உள்ள வீடொன்றிலேயே நகைகள் திருட்டு போயுள்ளது.அந்த வீட்டில் அந்தியேட்டி கிரியை நடைபெறவிருந்த நிலையிலேயே குறித்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.இன்று அதிகாலை மூன்று மணியளவில் சமையல் வேலைக்காக எழுந்த குடும்பத்தினர் சார்ஜ் போடுவதற்கு கையடக்க தொலைபேசியை தேடிய போது அதனை காணவில்லை. இந்நிலையில்  அலுமாரி மற்றும் கதவு திறந்த நிலையில் காணப்பட்டுள்ளது.பின்னர் நகைகளை பார்த்த போதே நகைகள் திருட்டு போயுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.அந்த குடும்பத்துடன் தொடர்புடைய யாரோ அல்லது இரகசியமாக நுழைந்த யாரோ திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாண பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு, கோப்பாய் பொலிஸார் ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement