• Jan 24 2025

சுழிபுரம் அலைமகள் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தினரை சந்தித்த இந்திய துணைதூதுவர் !

Tharmini / Jan 12th 2025, 2:38 pm
image

யாழ். சங்கானை பிரதேச செயலர் பிரிவில் கலைமகள் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தினரை யாழ் இந்திய துணைதூதுவர் சாய் முரளி இன்று (12) சந்தித்து கலந்துரையாடினார்.

இதன் பொழுது மீனவர்கள் தமது வாழ்வாதர பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியதோடு தொடர்ச்சியாக குறித்த கடற்றொழிலாளர்கள் மீன் பிடியில் ஈடுபடும் கடற்கரைக்கு தூதுவர் சென்றார்.

தொடர்ந்து அங்கு இழுவை மடிகளால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் நிலை குறித்தும் மீனவர்களின் தேவைகள் குறித்தும் கலந்துரையாடினார். இதேவேளை கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகளால் துணைதூதுவருக்கு மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

இதன் பொழுது யாழ். இந்திய துணைதூதுவராலய அதிகாரிகளான ரம்யா மற்றும் நாகராஜன் , அலைமகள் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.





சுழிபுரம் அலைமகள் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தினரை சந்தித்த இந்திய துணைதூதுவர் யாழ். சங்கானை பிரதேச செயலர் பிரிவில் கலைமகள் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தினரை யாழ் இந்திய துணைதூதுவர் சாய் முரளி இன்று (12) சந்தித்து கலந்துரையாடினார்.இதன் பொழுது மீனவர்கள் தமது வாழ்வாதர பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியதோடு தொடர்ச்சியாக குறித்த கடற்றொழிலாளர்கள் மீன் பிடியில் ஈடுபடும் கடற்கரைக்கு தூதுவர் சென்றார்.தொடர்ந்து அங்கு இழுவை மடிகளால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் நிலை குறித்தும் மீனவர்களின் தேவைகள் குறித்தும் கலந்துரையாடினார். இதேவேளை கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகளால் துணைதூதுவருக்கு மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.இதன் பொழுது யாழ். இந்திய துணைதூதுவராலய அதிகாரிகளான ரம்யா மற்றும் நாகராஜன் , அலைமகள் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now