• Nov 23 2024

இரத்தினபுரியில் தொடரும் தோட்ட அதிகாரிகளின் அடாவடித்தனம்...! அமைச்சர் ஜீவன் அதிரடி நடவடிக்கை...!

Sharmi / May 10th 2024, 10:40 am
image

இரத்தினபுரி தும்பறை 82ம் பிரிவில் உள்ள தோட்ட அதிகாரி மற்றும் காவலாளி ஆகியோர் இணைந்து தோட்ட தொழிலாளர்களை தாக்கிய சம்பவம் தொடர்பில் உடனடி நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு பொலிஸ்மா அதிபருக்கு நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளார். 

இரத்தினபுரி தும்பறை 82ம் பிரிவில் உள்ள தொழிலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் பி.சக்திவேல், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவர் சின்னையா இராஜமணி ஆகியோர் தாக்குதலுக்கு உள்ளான தொழிலாளர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

மேலும் தாக்குதலுக்கு உள்ளான ஒரு ஆண் தொழிலாளி மற்றும் ஒரு பெண் தொழிலாளி ஆகிய இரண்டு பேரும் இரத்தினபுரி பொலிஸாரின் பாதுகாப்போடு பலத்த காயங்களோடு இரத்தினபுரி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.

அதேவேளை தாக்குதல் நடாத்திய தோட்ட அதிகாரிகளை பொலிசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் பி.சக்திவேல் மேலும் தெரிவித்தார்.

இரத்தினபுரி மாவட்டத்தில் சிறுபான்மை மக்கள் பெரும்பான்மை மக்களினால் அச்சுறுத்தப்பட்டு தாக்கப்படுகின்ற சம்பவம் தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது.

இது போன்ற சம்பவம் இனிமேலும் இடம்பெறக்கூடாது இருந்த போதிலும் இந்த தாக்குதல் சம்பவத்தை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வன்மையாக கண்டிப்பதாகவும்  தெரிவித்தார்.

இரத்தினபுரியில் தொடரும் தோட்ட அதிகாரிகளின் அடாவடித்தனம். அமைச்சர் ஜீவன் அதிரடி நடவடிக்கை. இரத்தினபுரி தும்பறை 82ம் பிரிவில் உள்ள தோட்ட அதிகாரி மற்றும் காவலாளி ஆகியோர் இணைந்து தோட்ட தொழிலாளர்களை தாக்கிய சம்பவம் தொடர்பில் உடனடி நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு பொலிஸ்மா அதிபருக்கு நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளார். இரத்தினபுரி தும்பறை 82ம் பிரிவில் உள்ள தொழிலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் பி.சக்திவேல், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவர் சின்னையா இராஜமணி ஆகியோர் தாக்குதலுக்கு உள்ளான தொழிலாளர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.மேலும் தாக்குதலுக்கு உள்ளான ஒரு ஆண் தொழிலாளி மற்றும் ஒரு பெண் தொழிலாளி ஆகிய இரண்டு பேரும் இரத்தினபுரி பொலிஸாரின் பாதுகாப்போடு பலத்த காயங்களோடு இரத்தினபுரி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.அதேவேளை தாக்குதல் நடாத்திய தோட்ட அதிகாரிகளை பொலிசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் பி.சக்திவேல் மேலும் தெரிவித்தார்.இரத்தினபுரி மாவட்டத்தில் சிறுபான்மை மக்கள் பெரும்பான்மை மக்களினால் அச்சுறுத்தப்பட்டு தாக்கப்படுகின்ற சம்பவம் தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது.இது போன்ற சம்பவம் இனிமேலும் இடம்பெறக்கூடாது இருந்த போதிலும் இந்த தாக்குதல் சம்பவத்தை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வன்மையாக கண்டிப்பதாகவும்  தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement