• Nov 25 2024

காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளுக்கு நீதி கிடைக்க சர்வதேசம் குரல் கொடுக்க வேண்டும்- அமலநாயகி வேண்டுகோள்..!

Sharmi / Aug 28th 2024, 3:44 pm
image

வடக்கிலும் கிழக்கிலும் குரல் கொடுப்பது போல சர்வதேச நாடுகளிலும் எங்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் எனவும் கோருகின்றோம். மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட  உறவுகளின் மட்டக்களப்பு மாவட்ட சங்கத்தின் தலைவி அ.அமலநாயகி தெரிவித்தார்.

மட்டு.ஊடக அமையத்தில் இன்றையதினம்(28) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எதிர்வரும் 30 திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம், அதனை முன்னிட்டு திருகோணமலையில் சிவனாலயத்திற் முன்பாக இருந்து பேரணி ஒன்றை ஆரம்பிக்கவுள்ளோம். 

அதேவேளை வட மாகாணத்திலும் ஒரு பேரணியை மேற்கொள்ளவுள்ளோம்.

சர்வதேச நீதி பொறிமுறையை நாடியே நாங்கள் நீதி கேட்கும் பேரணி ஒன்றினை நடாத்தவுள்ளோம், இந்நிகழ்வில் அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.

இதற்கான நீதி வேண்டி நாம் தொடர்ச்சியாக போராடி வருகின்றோம்.

பொறுப்பு கூறும் தன்மை இலங்கை அரசாங்கத்திற்கு இல்லை என்பதால் சர்வதேசத்தை நாம் நாடி நிற்கின்றோம்.

முறையிட்ட எம்மைத் தான் தேடி தேடி விசாரனை செய்கின்றார்கள் அதனால்தான் ஐக்கிய நாடுகள் சபையை நாம் நாடி நிற்கின்றோம்.

ஜெனிவா கூட்டத் தொடர் எதிர்வரும் மாதம் இடம்பெறவுள்ளது. அதிலாவது எமது வலிகளுக்கு குரல் கொடுக்க வேண்டும்.

மரணம் என்பது எல்லோருக்கும் வரும். அது கண் முன்னே நடந்தால் பரவாயில்லை. ஆனால் எமது உறவுகளுக்கு என்ன நடந்தது என வெளிக்கொணர வேண்டும்.

வடக்கிலும் கிழக்கிலும் குரல் கொடுப்பது போல சர்வதேச நாடுகளிலும் எங்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் எனவும் கோருகின்றோம் எனவும் தெரிவித்தார்.

அதேவேளை தமிழர் ஒருவர் பொது வேட்பாளராக களமிறங்கியுள்ளார் அவருக்கு உங்களது ஆதரவு எப்படி இருக்கும்? என இதன்போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர்,

இதுவரை தமிழர் ஒருவர் வேட்பாளராக போட்டியிடாமல் இருந்தது. எமது ஆதரவு யாருக்கு என்று பொதுவாக எம்மால் வெளியிட முடியாது.

யார் ஜனாதிபதியானாலும் எமது கோரிக்கைகளுக்கு தீர்வு தர வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் என பதிலளித்தார்.


காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளுக்கு நீதி கிடைக்க சர்வதேசம் குரல் கொடுக்க வேண்டும்- அமலநாயகி வேண்டுகோள். வடக்கிலும் கிழக்கிலும் குரல் கொடுப்பது போல சர்வதேச நாடுகளிலும் எங்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் எனவும் கோருகின்றோம். மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட  உறவுகளின் மட்டக்களப்பு மாவட்ட சங்கத்தின் தலைவி அ.அமலநாயகி தெரிவித்தார்.மட்டு.ஊடக அமையத்தில் இன்றையதினம்(28) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.எதிர்வரும் 30 திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம், அதனை முன்னிட்டு திருகோணமலையில் சிவனாலயத்திற் முன்பாக இருந்து பேரணி ஒன்றை ஆரம்பிக்கவுள்ளோம். அதேவேளை வட மாகாணத்திலும் ஒரு பேரணியை மேற்கொள்ளவுள்ளோம்.சர்வதேச நீதி பொறிமுறையை நாடியே நாங்கள் நீதி கேட்கும் பேரணி ஒன்றினை நடாத்தவுள்ளோம், இந்நிகழ்வில் அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.இதற்கான நீதி வேண்டி நாம் தொடர்ச்சியாக போராடி வருகின்றோம்.பொறுப்பு கூறும் தன்மை இலங்கை அரசாங்கத்திற்கு இல்லை என்பதால் சர்வதேசத்தை நாம் நாடி நிற்கின்றோம்.முறையிட்ட எம்மைத் தான் தேடி தேடி விசாரனை செய்கின்றார்கள் அதனால்தான் ஐக்கிய நாடுகள் சபையை நாம் நாடி நிற்கின்றோம்.ஜெனிவா கூட்டத் தொடர் எதிர்வரும் மாதம் இடம்பெறவுள்ளது. அதிலாவது எமது வலிகளுக்கு குரல் கொடுக்க வேண்டும்.மரணம் என்பது எல்லோருக்கும் வரும். அது கண் முன்னே நடந்தால் பரவாயில்லை. ஆனால் எமது உறவுகளுக்கு என்ன நடந்தது என வெளிக்கொணர வேண்டும்.வடக்கிலும் கிழக்கிலும் குரல் கொடுப்பது போல சர்வதேச நாடுகளிலும் எங்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் எனவும் கோருகின்றோம் எனவும் தெரிவித்தார்.அதேவேளை தமிழர் ஒருவர் பொது வேட்பாளராக களமிறங்கியுள்ளார் அவருக்கு உங்களது ஆதரவு எப்படி இருக்கும் என இதன்போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர்,இதுவரை தமிழர் ஒருவர் வேட்பாளராக போட்டியிடாமல் இருந்தது. எமது ஆதரவு யாருக்கு என்று பொதுவாக எம்மால் வெளியிட முடியாது.யார் ஜனாதிபதியானாலும் எமது கோரிக்கைகளுக்கு தீர்வு தர வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் என பதிலளித்தார்.

Advertisement

Advertisement

Advertisement