• Jun 17 2024

மீன்பிடி சட்டதிருத்த வரைபு தொடர்பிலான பிரச்சினையை பாராளுமன்றத்தில் பேச வேண்டும் - மகஜர் வழங்கி வேண்டுகோள் விடுத்த கடல் தொழிலாளர்கள்...!

Anaath / May 26th 2024, 9:33 am
image

Advertisement

வடமாகாண கடற்றொழிலாளர் எதிர்நோக்கும் பிரசினைகள் மற்றும் அரசினால் கொண்டுவரப்படவுள்ள மீன்பிடி சட்டதிருத்த வரைபு சம்பந்தமாக வடக்கின் பாராளுமன்ற உறுப்பினர்களது ஆலோசனைகளையும் கருத்துக்களையும் கேட்டறியும் முகமாக கலந்துரையாடல் ஒன்று நேற்றைய தினம் (25) யாழில் உள்ள தனியார் விடுதியொன்றில் இன்று இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலானது வட மாகாண கடற்றொழிலாளர் இணையம் மற்றும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்ப்பாட்டில் இக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன் போது 10 கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது.

வடமாகாணத்தின் நான்கு மாவட்ட மீனவ பிரதிநிதிகளும் தமது மாவட்டம் சார்ந்த பிரச்சினைகளை முன்வைத்துள்ளதுடன் குறித்த பிரச்சினைகளை தமது சார்பில் பாராளுமன்றில் பேச வேண்டும் என்ற கோரிக்கையும் மீனவ பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்டது.

இதன் போது பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன் மற்றும் செ.கஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டதுடன், MA.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன்,அங்கஜன் இராமநாதன் சார்பில் அவர்களினுடைய பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

மீன்பிடி சட்டதிருத்த வரைபு தொடர்பிலான பிரச்சினையை பாராளுமன்றத்தில் பேச வேண்டும் - மகஜர் வழங்கி வேண்டுகோள் விடுத்த கடல் தொழிலாளர்கள். வடமாகாண கடற்றொழிலாளர் எதிர்நோக்கும் பிரசினைகள் மற்றும் அரசினால் கொண்டுவரப்படவுள்ள மீன்பிடி சட்டதிருத்த வரைபு சம்பந்தமாக வடக்கின் பாராளுமன்ற உறுப்பினர்களது ஆலோசனைகளையும் கருத்துக்களையும் கேட்டறியும் முகமாக கலந்துரையாடல் ஒன்று நேற்றைய தினம் (25) யாழில் உள்ள தனியார் விடுதியொன்றில் இன்று இடம்பெற்றது.குறித்த கலந்துரையாடலானது வட மாகாண கடற்றொழிலாளர் இணையம் மற்றும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்ப்பாட்டில் இக் கலந்துரையாடல் இடம்பெற்றது.இதன் போது 10 கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது.வடமாகாணத்தின் நான்கு மாவட்ட மீனவ பிரதிநிதிகளும் தமது மாவட்டம் சார்ந்த பிரச்சினைகளை முன்வைத்துள்ளதுடன் குறித்த பிரச்சினைகளை தமது சார்பில் பாராளுமன்றில் பேச வேண்டும் என்ற கோரிக்கையும் மீனவ பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்டது.இதன் போது பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன் மற்றும் செ.கஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டதுடன், MA.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன்,அங்கஜன் இராமநாதன் சார்பில் அவர்களினுடைய பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement