• Nov 24 2024

பொலிஸாருக்கு அழுத்தம் கொடுத்த விவகாரம்...! லலித் ஜயசிங்க பிணையில் விடுதலை...!samugammedia

Sharmi / Jan 16th 2024, 10:29 pm
image

கடந்த 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவிற்கு இரத்தினபுரி மேல் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன பிணை வழங்கியுள்ளார்.

2015 ஆம் ஆண்டு கஹவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பான பொலிஸ் விசாரணைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் லலித் ஜயசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

குற்றத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் அப்போதைய பிரதியமைச்சர் பிரேமலால் ஜயசேகரவை கைது செய்வதை தடுக்க பொலிஸாருக்கு அழுத்தம் கொடுத்ததாக முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


பொலிஸாருக்கு அழுத்தம் கொடுத்த விவகாரம். லலித் ஜயசிங்க பிணையில் விடுதலை.samugammedia கடந்த 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவிற்கு இரத்தினபுரி மேல் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன பிணை வழங்கியுள்ளார்.2015 ஆம் ஆண்டு கஹவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பான பொலிஸ் விசாரணைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் லலித் ஜயசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.குற்றத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் அப்போதைய பிரதியமைச்சர் பிரேமலால் ஜயசேகரவை கைது செய்வதை தடுக்க பொலிஸாருக்கு அழுத்தம் கொடுத்ததாக முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement