• Nov 22 2024

நாட்டைப் பிளவுபடுத்தவே ஜே.வி.பி ஆட்சிக்கு வர முயற்சிக்கின்றது! மேர்வின் சில்வா குற்றச்சாட்டு

Chithra / Feb 21st 2024, 3:35 pm
image

 

நாட்டை பிளவுபடுத்தும் நோக்கிலேயே ஜே.வி.பியினர் ஆட்சிக்குவர முயற்சிப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

நாட்டில் பொருட்களின் விலை குறைவடைந்துள்ளதாகவும் பொருட்களுக்கு தட்டுப்பாடும் இல்லை எனவும் எரிவாயு மற்றும் எரிபொருட்களுக்கு தட்டுப்பாடும் இல்லை எனவும் சிலர் கூறுகின்றனர்.

ஆனால் அது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயமல்ல. ஏனென்றால் சமையல் பொருட்கள், விவசாய உற்பத்திகள், ஆடைகள் என அனைத்தும் இன்று அதிக விலைக்கே விற்பனை செய்யப்படுகின்றன.

அதாவது தேசிய மக்கள் சக்தி ஒரு சந்தர்ப்பத்தில் விபச்சாரத்தை சட்டமாக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தது.

இன்று விபச்சாரம் மாத்திரமே மிக குறைந்த விலையில் கிடைப்பதாக தெரிகிறது.

இவ்வாறு நாட்டை அதள பாதாளத்திற்கு கொண்டு சென்றவர்கள் இன்று நாட்டில் மீண்டும் ஆட்சி செய்ய திட்டமிடுகின்றனர்.

நாட்டை பிளவுபடுத்த எண்ணும் ஜே.வி.பியினர் நாட்டை பிளவுபடுத்துவதற்காகவே ஆட்சிக்குவர எண்ணுகின்றனர்.

இதற்காகவா இந்தியாவுக்கு சென்றார்கள் என்ற கேள்வி எழுகின்றது என மேர்வின் சில்வா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டைப் பிளவுபடுத்தவே ஜே.வி.பி ஆட்சிக்கு வர முயற்சிக்கின்றது மேர்வின் சில்வா குற்றச்சாட்டு  நாட்டை பிளவுபடுத்தும் நோக்கிலேயே ஜே.வி.பியினர் ஆட்சிக்குவர முயற்சிப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் பொருட்களின் விலை குறைவடைந்துள்ளதாகவும் பொருட்களுக்கு தட்டுப்பாடும் இல்லை எனவும் எரிவாயு மற்றும் எரிபொருட்களுக்கு தட்டுப்பாடும் இல்லை எனவும் சிலர் கூறுகின்றனர்.ஆனால் அது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயமல்ல. ஏனென்றால் சமையல் பொருட்கள், விவசாய உற்பத்திகள், ஆடைகள் என அனைத்தும் இன்று அதிக விலைக்கே விற்பனை செய்யப்படுகின்றன.அதாவது தேசிய மக்கள் சக்தி ஒரு சந்தர்ப்பத்தில் விபச்சாரத்தை சட்டமாக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தது.இன்று விபச்சாரம் மாத்திரமே மிக குறைந்த விலையில் கிடைப்பதாக தெரிகிறது.இவ்வாறு நாட்டை அதள பாதாளத்திற்கு கொண்டு சென்றவர்கள் இன்று நாட்டில் மீண்டும் ஆட்சி செய்ய திட்டமிடுகின்றனர்.நாட்டை பிளவுபடுத்த எண்ணும் ஜே.வி.பியினர் நாட்டை பிளவுபடுத்துவதற்காகவே ஆட்சிக்குவர எண்ணுகின்றனர்.இதற்காகவா இந்தியாவுக்கு சென்றார்கள் என்ற கேள்வி எழுகின்றது என மேர்வின் சில்வா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement