• Oct 19 2024

சட்டம் சரியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்: ஜனாதிபதி தெரிவிப்பு ! samugammedia

Tamil nila / May 13th 2023, 9:34 pm
image

Advertisement

துறைசார் மேற்பார்வை குழுக்களின் இளைஞர் பிரதிநிதிகளை தெளிவுபடுத்தும் செயலமர்வு இன்று கொழும்பில் நடைபெற்றது.

இந்த நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றது.

பிரதமர் தினேஸ் குணவர்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

நாடாளுமன்றில் நிறுவப்பட்டுள்ள 17 துறைசார் மேற்பார்வை குழுக்களுக்கு இவ் இளைஞர் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்ற பொதுச்செயலாளருக்கு கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களுக்கு அமைய, சுமார் 550 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் அனுசரணையுடன், நாடாளுமன்றத்தால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வீதியில் இறங்கி போராடுவதும் வீடுகளை எரிப்பதும் பிரச்சினைகளுக்கு தீர்வு ஆகாது என குறிப்பிட்டார். 

பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து, நாடு வங்குரோத்து அடையும் போது மறுசீரமைப்பு தேவைப்படுவதாகவும் நாட்டின் பல நிறுவனங்களை மறுசீரமைக்க வேண்டியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். 

புதிய கல்வி முறை பற்றி சிந்திக்க வேண்டும் என கூறிய ஜனாதிபதி, சிறந்த எதிர்காலத்திற்கு நல்ல பொருளாதாரம் தேவை எனவும் சட்டம் சரியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

சட்டம் சரியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்: ஜனாதிபதி தெரிவிப்பு samugammedia துறைசார் மேற்பார்வை குழுக்களின் இளைஞர் பிரதிநிதிகளை தெளிவுபடுத்தும் செயலமர்வு இன்று கொழும்பில் நடைபெற்றது.இந்த நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றது.பிரதமர் தினேஸ் குணவர்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.நாடாளுமன்றில் நிறுவப்பட்டுள்ள 17 துறைசார் மேற்பார்வை குழுக்களுக்கு இவ் இளைஞர் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.நாடாளுமன்ற பொதுச்செயலாளருக்கு கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களுக்கு அமைய, சுமார் 550 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் அனுசரணையுடன், நாடாளுமன்றத்தால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வீதியில் இறங்கி போராடுவதும் வீடுகளை எரிப்பதும் பிரச்சினைகளுக்கு தீர்வு ஆகாது என குறிப்பிட்டார். பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து, நாடு வங்குரோத்து அடையும் போது மறுசீரமைப்பு தேவைப்படுவதாகவும் நாட்டின் பல நிறுவனங்களை மறுசீரமைக்க வேண்டியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். புதிய கல்வி முறை பற்றி சிந்திக்க வேண்டும் என கூறிய ஜனாதிபதி, சிறந்த எதிர்காலத்திற்கு நல்ல பொருளாதாரம் தேவை எனவும் சட்டம் சரியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement