• Sep 20 2024

இலங்கை கடற்படை கைது செய்த மீனவர்கள் தொடர்பில் மத்திய மந்திரிக்கு மு.க.ஸ்டாலின் அனுப்பிய கடிதம்..!samugammedia

Sharmi / Jul 10th 2023, 3:04 pm
image

Advertisement

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட தமிழக மீனவர்கள் 15 பேயும், மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திடத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழக  முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரி டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடிதம் ஒன்றின் மூலமே  இன்று அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய மீண்பிடியில் ஈடுபட்ட 15 தமிழக மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் .

அதோடு அவர்களது மீன்பிடிப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் ஊர்காவற்துறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த கடிதத்தில் மு.க.ஸ்டாலின் கருத்து வெளியிடுகையில்,


இந்த சம்பவம் தமிழ்நாட்டில் உள்ள மீனவ சமூகத்தினரிடையே மன உளைச்சலையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்திய-இலங்கைக் கடல் எல்லையை ஒட்டிய பகுதிகளில் மீன்பிடித் தொழிலை நம்பியே பல்லாயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரம் அடங்கியுள்ளது.

இதை தாங்கள் (மத்திய மந்திரி ஜெய்சங்கர்) நன்கு அறிவீர்கள். மீனவர்கள் தங்களது குடும்பத்தையும், சமூகத்தையும் பராமரிக்க மீன்பிடித் தொழிலை மட்டுமே நம்பியுள்ளனர்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இலங்கைக் கடற்படையினரால் இதுபோன்று கைது செய்யப்படும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருவது மீனவர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் ஆழ்ந்த வேதனையிலும், நிச்சயமற்ற தன்மையிலும் ஆழ்த்தியுள்ளது என தெரிவித்துள்ளார்.

இலங்கை கடற்படை கைது செய்த மீனவர்கள் தொடர்பில் மத்திய மந்திரிக்கு மு.க.ஸ்டாலின் அனுப்பிய கடிதம்.samugammedia இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட தமிழக மீனவர்கள் 15 பேயும், மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திடத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழக  முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரி டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். கடிதம் ஒன்றின் மூலமே  இன்று அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய மீண்பிடியில் ஈடுபட்ட 15 தமிழக மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் .அதோடு அவர்களது மீன்பிடிப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்டவர்கள் ஊர்காவற்துறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்நிலையில் குறித்த கடிதத்தில் மு.க.ஸ்டாலின் கருத்து வெளியிடுகையில்,இந்த சம்பவம் தமிழ்நாட்டில் உள்ள மீனவ சமூகத்தினரிடையே மன உளைச்சலையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்திய-இலங்கைக் கடல் எல்லையை ஒட்டிய பகுதிகளில் மீன்பிடித் தொழிலை நம்பியே பல்லாயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரம் அடங்கியுள்ளது.இதை தாங்கள் (மத்திய மந்திரி ஜெய்சங்கர்) நன்கு அறிவீர்கள். மீனவர்கள் தங்களது குடும்பத்தையும், சமூகத்தையும் பராமரிக்க மீன்பிடித் தொழிலை மட்டுமே நம்பியுள்ளனர்.ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இலங்கைக் கடற்படையினரால் இதுபோன்று கைது செய்யப்படும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருவது மீனவர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் ஆழ்ந்த வேதனையிலும், நிச்சயமற்ற தன்மையிலும் ஆழ்த்தியுள்ளது என தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement