• Nov 19 2024

பலமான கட்டமைப்பில் செயற்பட்ட விடுதலைப் புலிகள் - மீண்டும் போர் வேண்டாம்..! மஹிந்த

Chithra / May 20th 2024, 8:22 am
image


யுத்தத்தின் கொடுமையான அனுபவங்கள் இல்லாத சூழலில் தற்போது வாழ்கின்றோம்.  இராணுவத்தின் வீரத்துக்கு உயரிய அந்தஸ்து வழங்கி எதிர்காலத்தில் மீண்டும் யுத்தம் தோற்றம் பெறாத வகையில் நாட்டை நிர்வகிப்பது அனைவரினதும் பொறுப்பாகும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-

"மூன்று தசாப்தங்களாக இலங்கையை ஆக்கிரமித்திருந்த பிரிவினைவாத, பயங்கரவாத யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு 15 ஆண்டுகள் பூர்த்தியைடைந்துள்ளன.

1970 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஒரு குழுவாக ஆரம்பமான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு 2008 ஆம் ஆண்டு காலப்பகுதியில் உலகில் பிரபல்யமான பயங்கரவாத அமைப்பாக எழுச்சி பெற்றது.

தற்கொலை மனிதக் குண்டுதாரிகள் மற்றும் சிறுவர் படையணி என்பனவற்றை விடுதலைப்புலிகள் அமைப்பே உலகுக்கு அறிமுகம் செய்தது. 

தற்கொலைக் குண்டுகள் அடங்கிய சிறிய ரக படகுகள், இரவு நேரங்களில் தாக்குதல் நடத்தக் கூடிய இலகு விமானங்கள் உட்பட ஆயுதங்களைக் கொண்டு வரும் கப்பல்கள் எனப் பலமான கட்டமைப்பில் புலிகள் அமைப்பு செயற்பட்டதை நினைவுகூர வேண்டும்.

இலங்கை மற்றும் இந்திய அரச தலைவர்கள் இருவர் உட்பட இலங்கையின் சிரேஷ்ட அரச தலைவர்கள் மற்றும் சிவில் மக்கள் உள்ளடங்களாகப் பலரைக் கொலை செய்த விடுதலைப்புலிகள் அமைப்புடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட பல்வேறு வழிகளில் அழைப்பு விடுத்தேன். 

சகல வழிகளையும் நிராகரித்து விடுதலைப்புலிகள் அமைப்பு தாக்குதலைத் தொடர்ந்ததால் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரும் எதிர்த் தாக்குதலைத் தீவிரமாக முன்னெடுத்தோம்.

விடுதலைப்புலிகள் அமைப்புக்கு முடிவுகட்டி யுத்தத்தையும் முடிவுக்குக் கொண்டு வந்து நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்கு முப்படையினர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டார்கள். 

2009.05.18 ஆம் திகதி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் முழுமையாக இராணுவத்தின் கீழ் கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து 2009.05.19 ஆம் திகதி காலை வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழந்தமை உறுதிப்படுத்தப்பட்டது.

நான்காவது ஈழப் போராட்டத்தை தோற்கடித்தது மாத்திரமல்ல விடுதலைப்புலிகள் அமைப்பில் பணயமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த பல இலட்சக்கணக்கான சிவில் பிரஜைகள் பாதுகாக்கப்பட்டார்கள்.

யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அப்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பாதுகாப்புப் படைகளின் பிரதானி, முப்படைகளின் தளபதிகள், பொலிஸ்மா அதிபர், சிவில் பாதுகாப்புப் படையணியின் பிரதானிகள் மற்றும் முப்படையினர் ஆகியோருக்கும், நாட்டு மக்களுக்கும் முன்னாள் ஐந்தாவது நிறைவேற்றுத்துறை ஜனாதிபதி என்ற அடிப்படையில் கௌரவமளிக்கின்றேன்.

யுத்தத்தின் கொடுமையான அனுபவங்கள் இல்லாத சூழலில் தற்போது வாழ்கின்றோம். ஆகவே, யுத்தம் பற்றி சிந்திக்கக் கூடாது என ஒருசிலர் குறிப்பிடுகின்றார்கள். 

இராணுவத்தின் வீரத்துக்கு உயரிய அந்தஸ்து வழங்கி நாட்டில் மீண்டும் யுத்தம் தோற்றம் பெறாத வகையில் நாட்டை நிர்வகிப்பது அனைவரினதும் பொறுப்பாகும்." - என்றுள்ளது.

பலமான கட்டமைப்பில் செயற்பட்ட விடுதலைப் புலிகள் - மீண்டும் போர் வேண்டாம். மஹிந்த யுத்தத்தின் கொடுமையான அனுபவங்கள் இல்லாத சூழலில் தற்போது வாழ்கின்றோம்.  இராணுவத்தின் வீரத்துக்கு உயரிய அந்தஸ்து வழங்கி எதிர்காலத்தில் மீண்டும் யுத்தம் தோற்றம் பெறாத வகையில் நாட்டை நிர்வகிப்பது அனைவரினதும் பொறுப்பாகும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-"மூன்று தசாப்தங்களாக இலங்கையை ஆக்கிரமித்திருந்த பிரிவினைவாத, பயங்கரவாத யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு 15 ஆண்டுகள் பூர்த்தியைடைந்துள்ளன.1970 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஒரு குழுவாக ஆரம்பமான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு 2008 ஆம் ஆண்டு காலப்பகுதியில் உலகில் பிரபல்யமான பயங்கரவாத அமைப்பாக எழுச்சி பெற்றது.தற்கொலை மனிதக் குண்டுதாரிகள் மற்றும் சிறுவர் படையணி என்பனவற்றை விடுதலைப்புலிகள் அமைப்பே உலகுக்கு அறிமுகம் செய்தது. தற்கொலைக் குண்டுகள் அடங்கிய சிறிய ரக படகுகள், இரவு நேரங்களில் தாக்குதல் நடத்தக் கூடிய இலகு விமானங்கள் உட்பட ஆயுதங்களைக் கொண்டு வரும் கப்பல்கள் எனப் பலமான கட்டமைப்பில் புலிகள் அமைப்பு செயற்பட்டதை நினைவுகூர வேண்டும்.இலங்கை மற்றும் இந்திய அரச தலைவர்கள் இருவர் உட்பட இலங்கையின் சிரேஷ்ட அரச தலைவர்கள் மற்றும் சிவில் மக்கள் உள்ளடங்களாகப் பலரைக் கொலை செய்த விடுதலைப்புலிகள் அமைப்புடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட பல்வேறு வழிகளில் அழைப்பு விடுத்தேன். சகல வழிகளையும் நிராகரித்து விடுதலைப்புலிகள் அமைப்பு தாக்குதலைத் தொடர்ந்ததால் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரும் எதிர்த் தாக்குதலைத் தீவிரமாக முன்னெடுத்தோம்.விடுதலைப்புலிகள் அமைப்புக்கு முடிவுகட்டி யுத்தத்தையும் முடிவுக்குக் கொண்டு வந்து நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்கு முப்படையினர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டார்கள். 2009.05.18 ஆம் திகதி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் முழுமையாக இராணுவத்தின் கீழ் கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து 2009.05.19 ஆம் திகதி காலை வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழந்தமை உறுதிப்படுத்தப்பட்டது.நான்காவது ஈழப் போராட்டத்தை தோற்கடித்தது மாத்திரமல்ல விடுதலைப்புலிகள் அமைப்பில் பணயமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த பல இலட்சக்கணக்கான சிவில் பிரஜைகள் பாதுகாக்கப்பட்டார்கள்.யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அப்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பாதுகாப்புப் படைகளின் பிரதானி, முப்படைகளின் தளபதிகள், பொலிஸ்மா அதிபர், சிவில் பாதுகாப்புப் படையணியின் பிரதானிகள் மற்றும் முப்படையினர் ஆகியோருக்கும், நாட்டு மக்களுக்கும் முன்னாள் ஐந்தாவது நிறைவேற்றுத்துறை ஜனாதிபதி என்ற அடிப்படையில் கௌரவமளிக்கின்றேன்.யுத்தத்தின் கொடுமையான அனுபவங்கள் இல்லாத சூழலில் தற்போது வாழ்கின்றோம். ஆகவே, யுத்தம் பற்றி சிந்திக்கக் கூடாது என ஒருசிலர் குறிப்பிடுகின்றார்கள். இராணுவத்தின் வீரத்துக்கு உயரிய அந்தஸ்து வழங்கி நாட்டில் மீண்டும் யுத்தம் தோற்றம் பெறாத வகையில் நாட்டை நிர்வகிப்பது அனைவரினதும் பொறுப்பாகும்." - என்றுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement