பிரயாக்ராஜ் கும்பமேளாவில் காந்தக் கண்களுடன் இளம்பெண் ஒருவர் வலம் வருகிறார்.
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் இருந்தும் பல்லாயிரக்கணக்கானோர் பிரயாக்ராஜில் குவிந்துள்ளனர்.
இந்த மேளா பிப். 26ல் நிறைவு பெறுகிறது. கும்பமேளாவில் இளம்பெண் ஒருவர் அனைவரின் கவனத்தை ஈர்த்து இருக்கிறார். காரணம் அவரின் அழகும், காந்த கண்களுமே. மத்திய பிரதேசம் இந்தூரைச் சேர்ந்தவர். அவரது குடும்பத்தினர், பாசி மணி, ருத்ராட்சை மாலை விற்று வருகின்றனர்.
தற்போது கும்பமேளா நடைபெற்று வருவதால் தமது குடும்பத்துடன் அவர் பிரயாக்ராஜ் சென்று ருத்ராட்ச மாலைகளை விற்று வருகிறார்.
காந்த கண்களுடன், அழகு ஓவியமாக காட்சியளிக்கும் அவரின் வீடியோக்கள், போட்டோக்கள் இணையத்தில் சக்கை போடு போடுகின்றன.
காந்த கண்ணழகி, பிரவுன் ப்யூட்டி, கும்பமேளா மோனாலிசா என்று ஆளுக்கு ஒரு பெயர் வைத்து, அந்த இளம்பெண்ணை ட்ரோல் செய்கின்றனர்.
விழாவுக்கு வந்த பல வி.ஐ.பி.க்கள், யுடியூபர்கள் இவரை போட்டோ, வீடியோ எடுத்து இணையத்தை அதகளம் செய்திருக்கின்றனர்.
கும்பமேளாவை காட்டும் வட மாநில தொலைக்காட்சிகள் அனைத்தும் இவரையும் சேர்த்தே காட்டுகின்றன.
கும்பமேளாவில் ஏக பிரபலமான அவரின் பெயர் மோனாலிசா போன்ஸ்லே.
வறுமை காரணமாக ருத்ராட்ச மாலைகளை விற்று வருகிறார். வீடியோக்கள் வைரலான போது மகிழ்ச்சியில் இருந்த மோனாலிசாவும், அவரது குடும்பத்தினரும் இப்போது மிகவும் வருத்தத்தில் இருக்கின்றனர்.
பிரயாக்ராஜில் கும்பமேளாவை கலக்கும் காந்தக் கண்ணழகி பிரயாக்ராஜ் கும்பமேளாவில் காந்தக் கண்களுடன் இளம்பெண் ஒருவர் வலம் வருகிறார். உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் இருந்தும் பல்லாயிரக்கணக்கானோர் பிரயாக்ராஜில் குவிந்துள்ளனர். இந்த மேளா பிப். 26ல் நிறைவு பெறுகிறது. கும்பமேளாவில் இளம்பெண் ஒருவர் அனைவரின் கவனத்தை ஈர்த்து இருக்கிறார். காரணம் அவரின் அழகும், காந்த கண்களுமே. மத்திய பிரதேசம் இந்தூரைச் சேர்ந்தவர். அவரது குடும்பத்தினர், பாசி மணி, ருத்ராட்சை மாலை விற்று வருகின்றனர்.தற்போது கும்பமேளா நடைபெற்று வருவதால் தமது குடும்பத்துடன் அவர் பிரயாக்ராஜ் சென்று ருத்ராட்ச மாலைகளை விற்று வருகிறார். காந்த கண்களுடன், அழகு ஓவியமாக காட்சியளிக்கும் அவரின் வீடியோக்கள், போட்டோக்கள் இணையத்தில் சக்கை போடு போடுகின்றன.காந்த கண்ணழகி, பிரவுன் ப்யூட்டி, கும்பமேளா மோனாலிசா என்று ஆளுக்கு ஒரு பெயர் வைத்து, அந்த இளம்பெண்ணை ட்ரோல் செய்கின்றனர். விழாவுக்கு வந்த பல வி.ஐ.பி.க்கள், யுடியூபர்கள் இவரை போட்டோ, வீடியோ எடுத்து இணையத்தை அதகளம் செய்திருக்கின்றனர். கும்பமேளாவை காட்டும் வட மாநில தொலைக்காட்சிகள் அனைத்தும் இவரையும் சேர்த்தே காட்டுகின்றன.கும்பமேளாவில் ஏக பிரபலமான அவரின் பெயர் மோனாலிசா போன்ஸ்லே. வறுமை காரணமாக ருத்ராட்ச மாலைகளை விற்று வருகிறார். வீடியோக்கள் வைரலான போது மகிழ்ச்சியில் இருந்த மோனாலிசாவும், அவரது குடும்பத்தினரும் இப்போது மிகவும் வருத்தத்தில் இருக்கின்றனர்.