• May 01 2024

அரகலய மக்கள் இயக்கத்தின் முக்கிய செயற்பாட்டாளர் கைது!

Sharmi / Jan 5th 2023, 1:07 pm
image

Advertisement

அரகலய மக்கள் இயக்கத்தின் முக்கிய செயற்பாட்டாளரான ரந்திமால் கமகே கைது செய்யப்பட்டுள்ளார்.

அரகலய மக்கள் இயக்கத்தின் முக்கிய செயற்பாட்டாளரான ரண்டிமல் கமகே, இன்று (05) காலை டுபாயிலிருந்து வந்து கொண்டிருந்த போது கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டார்.

32 வயதான ரந்திமால் கமகே, பொது நிர்வாக அமைச்சின் அபிவிருத்தி உத்தியோகத்தர் என்பதுடன், காலி, கராப்பிட்டியவில் வசிக்கும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பட்டதாரி ஆவார்.

கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவுத் திணைக்கள அதிகாரிகள் அவரது ஆவணங்களைச் சரிபார்க்கும் போது அவர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை விதித்துள்ளதாக திணைக்களத்தின் கணினி அமைப்பில் காட்டியுள்ளனர்.

ஆனால் அவர் நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்படாததால், அவர் அங்கிருந்து விடுவிக்கப்பட்டவுடன் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று அங்கு வந்து அவரை கைது செய்யுமாறு எழுத்துமூல கோரிக்கையை சமர்ப்பித்து இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

குருதுவத்தை பொலிஸாரின் வேண்டுகோளின் பேரில் தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்திற்குள் நுழைந்து அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரகலய மக்கள் இயக்கத்தின் முக்கிய செயற்பாட்டாளர் கைது அரகலய மக்கள் இயக்கத்தின் முக்கிய செயற்பாட்டாளரான ரந்திமால் கமகே கைது செய்யப்பட்டுள்ளார்.அரகலய மக்கள் இயக்கத்தின் முக்கிய செயற்பாட்டாளரான ரண்டிமல் கமகே, இன்று (05) காலை டுபாயிலிருந்து வந்து கொண்டிருந்த போது கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டார்.32 வயதான ரந்திமால் கமகே, பொது நிர்வாக அமைச்சின் அபிவிருத்தி உத்தியோகத்தர் என்பதுடன், காலி, கராப்பிட்டியவில் வசிக்கும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பட்டதாரி ஆவார்.கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவுத் திணைக்கள அதிகாரிகள் அவரது ஆவணங்களைச் சரிபார்க்கும் போது அவர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை விதித்துள்ளதாக திணைக்களத்தின் கணினி அமைப்பில் காட்டியுள்ளனர். ஆனால் அவர் நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்படாததால், அவர் அங்கிருந்து விடுவிக்கப்பட்டவுடன் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று அங்கு வந்து அவரை கைது செய்யுமாறு எழுத்துமூல கோரிக்கையை சமர்ப்பித்து இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.குருதுவத்தை பொலிஸாரின் வேண்டுகோளின் பேரில் தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்திற்குள் நுழைந்து அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement