• May 17 2024

பரீட்சை காலங்களில் மின்வெட்டினை அமுல்படுத்த வேண்டாம் என மீண்டும் வலியுறுத்திய முக்கிய அமைப்பு!

Sharmi / Jan 27th 2023, 3:02 pm
image

Advertisement

உயர்தரப் பரீட்சை நடைபெறும் பெப்ரவரி 17ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மின்வெட்டினை அமுல்படுத்த வேண்டாம் என  இலங்கை மின்சார சபைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எழுத்துமூலம் அறிவித்துள்ளது.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவினால் இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுகின்ற 3 இலட்சத்து 31 ஆயிரத்து 709 பரீட்சார்த்திகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக நேற்று முதல் எதிர்வரும் பெப்ரவரி 17ஆம் திகதி வரை திட்டமிடப்பட்ட மின் தடையை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகரிக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, பெப்ரவரி 17ஆம் திகதி வரை தடையற்ற மின்சாரத்தை வழங்குமாறு மின்சார சபைக்கு அறிவுறுத்துவதாகவும், அதுவரை திட்டமிடப்பட்ட மின்சாரத் தடைகளுக்கான அனுமதிக் கோரிக்கைகளை சமர்ப்பிப்பதைத் தவிர்க்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த காலப்பகுதியில் மின் தடை அமுல்படுத்தப்பட்டால், மின்சார பரிமாற்றம் மற்றும் மொத்த விநியோக உரிமம் எண் EL/T/09-002 இன் நிபந்தனை 30(10)ஐ மீறுவதற்கு மின் விநியோக உரிமதாரர் சட்டப்பூர்வமாக பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பரீட்சை காலங்களில் மின்வெட்டினை அமுல்படுத்த வேண்டாம் என மீண்டும் வலியுறுத்திய முக்கிய அமைப்பு உயர்தரப் பரீட்சை நடைபெறும் பெப்ரவரி 17ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மின்வெட்டினை அமுல்படுத்த வேண்டாம் என  இலங்கை மின்சார சபைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எழுத்துமூலம் அறிவித்துள்ளது.இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவினால் இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுகின்ற 3 இலட்சத்து 31 ஆயிரத்து 709 பரீட்சார்த்திகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக நேற்று முதல் எதிர்வரும் பெப்ரவரி 17ஆம் திகதி வரை திட்டமிடப்பட்ட மின் தடையை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகரிக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இதற்கமைய, பெப்ரவரி 17ஆம் திகதி வரை தடையற்ற மின்சாரத்தை வழங்குமாறு மின்சார சபைக்கு அறிவுறுத்துவதாகவும், அதுவரை திட்டமிடப்பட்ட மின்சாரத் தடைகளுக்கான அனுமதிக் கோரிக்கைகளை சமர்ப்பிப்பதைத் தவிர்க்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.குறித்த காலப்பகுதியில் மின் தடை அமுல்படுத்தப்பட்டால், மின்சார பரிமாற்றம் மற்றும் மொத்த விநியோக உரிமம் எண் EL/T/09-002 இன் நிபந்தனை 30(10)ஐ மீறுவதற்கு மின் விநியோக உரிமதாரர் சட்டப்பூர்வமாக பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement