• May 19 2024

மாநகரசபை உறுப்பினர்களை நாயுடன் ஒப்பிட்ட உறுப்பினர்; ஒரு மாத தடை விதித்தார் முதல்வர்! SamugamMedia

Tamil nila / Feb 16th 2023, 7:17 pm
image

Advertisement

யாழ்ப்பாணம் மாநகர சபையில் உறுப்பினர்களை நாயுடன் ஒப்பிட்டு உரையாற்றிய உறுப்பினருக்கு ஒரு மாத தடை விதிக்கப்பட்டது. 


யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2023ஆம் ஆண்டிற்கான பெப்ரவரி மாத கூட்டம் இன்று சபை மண்டபத்தில் மாநகர முதல்வர் இ.ஆனல்ட் தலைமையில் இடம்பெற்றது. இதன் போதே இவ்வாறு தடை விதிக்கப்படுவதாக முதல்வர் தெரிவித்தார். 


மாநகர சபையில் சபை அமர்வு இடம்பெற்றுக்கொண்டிருந்த சமயம. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் வை.கிருபாகரன் கருத்து தெரிவித்த சமயம் அதே கட்சியை சேர்ந்த மற்றுமோர் உறுப்பினரான பா.பதமமுரளி  இங்குள்ள சிலர் "வைக்கோல் பட்டடை நாய் போன்று " செயல்படுகின்றனர் எனத் தெரிவித்தார். அவ்வாறு தவறான வார்த்தை கொண்ட உவமையை கூற வேண்டாம் அந்தச் சொல்லை மீளப் பெற்று மன்னிப்புக் கோருங்கள் என கோரப்பட்டது. 



நான் பேச்சு வழக்கில் உள்ள சொல்லையே கூறினேன் தொப்பி அளவானவர்கள் அணியாலாம் மன்னிப்புக் கோரமாட்டேன் என உறுப்பினர் மீண்டும. கோரினார். 


இதனால், இதேபோன்று பிறிதொரு உறுப்பினர் நாய் மாதிரி குலைக்ககூடாது எனக் கூறிய வார்த்தைக்கு மன்னிப்புக்கோர மறுத்தமையால் அவரை முன்னால் முதல்வர் சபை அனுமதியுடன் ஒரு மாதம. சபை நடவடிக்கைகளில் பங்குகொள்ளத் தடை விதித்தார். தற்போது இன்னுமொரு உறுப்பினருக்கு நடவடிக்கை மாறுபடக் கூடாது என சுட்டிக்காட்டப்பட்டது. 


இதன் போது நாயை உவமை தெரிவித்த உறுப்பினரை சபையில் இருந்து வெளியேற்றுவதாகவும் ஒரு மாதம் இடை நிறுத்தும் முடிவை சபை ஏற்கின்றதா எனக்கோரியபோது சபையில் இருந்நவர்கள் ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் இன்றில் இருந்து ஒரு மாத காலத்திற்கு சபை நடவடிக்கைகளில் பங்குகொள்ளவும் தடை விதிப்பதாக முதல்வர் இ.ஆனல்ட் தெரிவித்தார்.

மாநகரசபை உறுப்பினர்களை நாயுடன் ஒப்பிட்ட உறுப்பினர்; ஒரு மாத தடை விதித்தார் முதல்வர் SamugamMedia யாழ்ப்பாணம் மாநகர சபையில் உறுப்பினர்களை நாயுடன் ஒப்பிட்டு உரையாற்றிய உறுப்பினருக்கு ஒரு மாத தடை விதிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2023ஆம் ஆண்டிற்கான பெப்ரவரி மாத கூட்டம் இன்று சபை மண்டபத்தில் மாநகர முதல்வர் இ.ஆனல்ட் தலைமையில் இடம்பெற்றது. இதன் போதே இவ்வாறு தடை விதிக்கப்படுவதாக முதல்வர் தெரிவித்தார். மாநகர சபையில் சபை அமர்வு இடம்பெற்றுக்கொண்டிருந்த சமயம. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் வை.கிருபாகரன் கருத்து தெரிவித்த சமயம் அதே கட்சியை சேர்ந்த மற்றுமோர் உறுப்பினரான பா.பதமமுரளி  இங்குள்ள சிலர் "வைக்கோல் பட்டடை நாய் போன்று " செயல்படுகின்றனர் எனத் தெரிவித்தார். அவ்வாறு தவறான வார்த்தை கொண்ட உவமையை கூற வேண்டாம் அந்தச் சொல்லை மீளப் பெற்று மன்னிப்புக் கோருங்கள் என கோரப்பட்டது. நான் பேச்சு வழக்கில் உள்ள சொல்லையே கூறினேன் தொப்பி அளவானவர்கள் அணியாலாம் மன்னிப்புக் கோரமாட்டேன் என உறுப்பினர் மீண்டும. கோரினார். இதனால், இதேபோன்று பிறிதொரு உறுப்பினர் நாய் மாதிரி குலைக்ககூடாது எனக் கூறிய வார்த்தைக்கு மன்னிப்புக்கோர மறுத்தமையால் அவரை முன்னால் முதல்வர் சபை அனுமதியுடன் ஒரு மாதம. சபை நடவடிக்கைகளில் பங்குகொள்ளத் தடை விதித்தார். தற்போது இன்னுமொரு உறுப்பினருக்கு நடவடிக்கை மாறுபடக் கூடாது என சுட்டிக்காட்டப்பட்டது. இதன் போது நாயை உவமை தெரிவித்த உறுப்பினரை சபையில் இருந்து வெளியேற்றுவதாகவும் ஒரு மாதம் இடை நிறுத்தும் முடிவை சபை ஏற்கின்றதா எனக்கோரியபோது சபையில் இருந்நவர்கள் ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் இன்றில் இருந்து ஒரு மாத காலத்திற்கு சபை நடவடிக்கைகளில் பங்குகொள்ளவும் தடை விதிப்பதாக முதல்வர் இ.ஆனல்ட் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement