• Aug 12 2025

பிரதமரை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் செயற்படும் மக்கள் விடுதலை முன்னணியினர் - உதய கம்மன்பில குற்றச்சாட்டு

Chithra / Aug 12th 2025, 10:35 am
image

மக்கள் விடுதலை முன்னணியின் ஒரு தரப்பினர் பிரதமரை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் தற்போது செயற்படுகின்றனர் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள பிவிதுரு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் நேற்று  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பிரதமர் பாராளுமன்றத்தில் குறிப்பிடும் ஏதேனும் விடயத்தில் தவறு இருந்தால் அதனை ஜனாதிபதி சுட்டிக்காட்டி திருத்தம் செய்ய வேண்டும்.

அல்லது பிரதமர் அதனை திருத்திக்கொள்ள வேண்டும். இவ்விருவரையும் தவிர்த்து பிறிதொருவர் பிரதமரின் கருத்தை விமர்சிக்க முடியாது.

அமைச்சர் வசந்த சமரசிங்க பிரதமரை மக்கள் மத்தியில் மலினப்படுத்தியுள்ளார். பிரதமரின் கருத்தை தெளிவுப்படுத்தும் அளவுக்கு அமைச்சர் வசந்த சமரசிங்க சிரேஷ்டத்துவமிக்கவரல்ல,

ஐக்கிய மக்கள் சக்திக்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையிலான முரண்பாடு தீவிரமடைந்துள்ளதை கடந்த மே மாதம் வெளிப்படுத்தியிருந்தோம்.

அமைச்சரவையில் மாற்றம் ஏற்படவுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.

பிரதமர் ஹரிணி அமரசூரியவை பதவி நீக்கி விட்டு, பிமல் ரத்நாயக்கவை பிரதமராக நியமிப்பது தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் காரியாலயத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஜனாதிபதியும் கலந்து கொண்டுள்ளார்.

கலாநிதி ஹரிணி அமரசூரியவை பிரதமர் பதவியில் இருந்து நீக்காமல் இருப்பதற்குரிய ஆறு காரணிகளை ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் இந்த தீர்மானத்தால் மக்கள் விடுதலை முன்னணியினர் அதிருப்தியடைந்து பிரதமருக்கு எதிராக மக்கள் மத்தியில் தவறானதொரு நிலைப்பாட்டை ஏற்படுத்தி அவர் சுயமாகவே பதவி விலகும் நிலைமையை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்.இது முற்றிலும் தவறானதொரு செயற்பாடு என்றார்.

இந்நிலையில்அரசாங்கத்திற்குள் பிளவுகள் இருப்பதாக கூறப்படுவதை நிராகரித்த தேசிய மக்கள் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் திலின சமரகோன், நாட்டை அபிவிருத்தி செய்வதில் அனைத்து உறுப்பினர்களும் ஒன்றுபட்டுள்ளதாகக் கூறினார்.

பிரதமர் தலைமையில் ஒரு தனி குழு இருப்பதாகக் கூறி, நிர்வாகத்தில் ஒரு பிளவை எதிர்க்கட்சி சித்தரிக்க முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டினார். 

பிரதமர் தலைமையிலான ஒரு குழுவுடன் அரசாங்கத்தில் பிளவுகள் இருப்பதாக அவர்கள் காட்ட முயற்சிக்கிறார்கள், ஆனால் அது உண்மையல்ல, என்று அவர் கூறினார். 

பிரதமரை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் செயற்படும் மக்கள் விடுதலை முன்னணியினர் - உதய கம்மன்பில குற்றச்சாட்டு மக்கள் விடுதலை முன்னணியின் ஒரு தரப்பினர் பிரதமரை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் தற்போது செயற்படுகின்றனர் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.கொழும்பில் உள்ள பிவிதுரு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் நேற்று  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.பிரதமர் பாராளுமன்றத்தில் குறிப்பிடும் ஏதேனும் விடயத்தில் தவறு இருந்தால் அதனை ஜனாதிபதி சுட்டிக்காட்டி திருத்தம் செய்ய வேண்டும்.அல்லது பிரதமர் அதனை திருத்திக்கொள்ள வேண்டும். இவ்விருவரையும் தவிர்த்து பிறிதொருவர் பிரதமரின் கருத்தை விமர்சிக்க முடியாது.அமைச்சர் வசந்த சமரசிங்க பிரதமரை மக்கள் மத்தியில் மலினப்படுத்தியுள்ளார். பிரதமரின் கருத்தை தெளிவுப்படுத்தும் அளவுக்கு அமைச்சர் வசந்த சமரசிங்க சிரேஷ்டத்துவமிக்கவரல்ல,ஐக்கிய மக்கள் சக்திக்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையிலான முரண்பாடு தீவிரமடைந்துள்ளதை கடந்த மே மாதம் வெளிப்படுத்தியிருந்தோம்.அமைச்சரவையில் மாற்றம் ஏற்படவுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.பிரதமர் ஹரிணி அமரசூரியவை பதவி நீக்கி விட்டு, பிமல் ரத்நாயக்கவை பிரதமராக நியமிப்பது தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் காரியாலயத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஜனாதிபதியும் கலந்து கொண்டுள்ளார்.கலாநிதி ஹரிணி அமரசூரியவை பிரதமர் பதவியில் இருந்து நீக்காமல் இருப்பதற்குரிய ஆறு காரணிகளை ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.ஜனாதிபதியின் இந்த தீர்மானத்தால் மக்கள் விடுதலை முன்னணியினர் அதிருப்தியடைந்து பிரதமருக்கு எதிராக மக்கள் மத்தியில் தவறானதொரு நிலைப்பாட்டை ஏற்படுத்தி அவர் சுயமாகவே பதவி விலகும் நிலைமையை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்.இது முற்றிலும் தவறானதொரு செயற்பாடு என்றார்.இந்நிலையில்அரசாங்கத்திற்குள் பிளவுகள் இருப்பதாக கூறப்படுவதை நிராகரித்த தேசிய மக்கள் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் திலின சமரகோன், நாட்டை அபிவிருத்தி செய்வதில் அனைத்து உறுப்பினர்களும் ஒன்றுபட்டுள்ளதாகக் கூறினார்.பிரதமர் தலைமையில் ஒரு தனி குழு இருப்பதாகக் கூறி, நிர்வாகத்தில் ஒரு பிளவை எதிர்க்கட்சி சித்தரிக்க முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டினார். பிரதமர் தலைமையிலான ஒரு குழுவுடன் அரசாங்கத்தில் பிளவுகள் இருப்பதாக அவர்கள் காட்ட முயற்சிக்கிறார்கள், ஆனால் அது உண்மையல்ல, என்று அவர் கூறினார். 

Advertisement

Advertisement

Advertisement