• Sep 20 2024

முல்லைத்தீவில் புத்தர் சிலை வைக்கும் நடவடிக்கை - பொது மக்கள் எதிர்ப்பு!samugammedia

Tamil nila / Sep 29th 2023, 4:23 pm
image

Advertisement

தனக்கு மூக்கு போனாலும் பிரச்சினையில்லை எதிரிக்கு சகுனம் பிழைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் முல்லைத்தீவு மாவட்டம் ஓட்டுசுட்டான்பிரதேச செயலக பிரிவிலுள்ள திருமுறிகண்டி செல்வபுரம் பகுதியில் அமைந்துள்ள சிவன் ஆலயக் காணியில் புத்தகர் சிலை  ஒன்றை வைப்பதற்கு ஊடகவியலாளர்ஒருவர் எடுத்த நடவடிக்கை கிராம மக்களின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டுள்ளதாக எதிர்ப்பில் ஈடுப்பட்ட பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.



இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

மிக நீண்ட காலமாக உள்ள சிவன் கோவில் காணியில்  அதே கிராமத்தைச் சேர்ந்த இடையில்  றோமன் கத்தோலிக்கம் அல்லாத கிறிஸ்த்தவ மத்திற்கு மாறிய ஊடகவியலாளர் ஒருவரும் குடியிருந்து வருகின்றார். ஆலய நிர்வாகத்திற்கும், குறித்த ஊடகவியலாளருக்கும்  இடையில் மீள் குடியேற்றத்திற்கு பின்னனர் பிணக்கு நிலவி வருகிறது.


இந்த நிலையில் குறித்த காணியில் ஒரு பகுதியை சிவன் ஆலயத்திற்கும் ஒரு பகுதியை ஊடகவியலாளருக்கும் என பிணக்குக்கு தீர்வு காணப்பட்ட போதும் குறித்த ஊடகவியலாளர் அதனை ஏற்றுக்கொள்ளாது காணியின் பெரும் பகுதியை தனக்கு வழங்க வேண்டும் என்று  தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கையில் ஈடுப்பட்டு வந்துள்ளார். 

அவரின் அனைத்து நடவடிக்கைகளும் தோல்வியடைந்த நிலையில் குறுக்கு வழியில் சிந்தித்த ஊடகவியலாளர் கிளிநொச்சியில் அரசியலில் அதிகாரத்தில் உள்ளவர்களின் செல்வாக்குடன் தனக்கு மூக்கு போனாலும் பிரச்சினையில்லை  சிவன் கோவில் நிர்வாகத்திற்கும் ஊர் மக்களுக்கும் ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்ற அடிப்படையில் இராணுவத்துடன் உரையாடி அவர்களின் ஒப்புதலுடன் அவர்களின் மூலம் பெறப்பட்ட புத்தகர் சிலை ஒன்றை சிவன்கோவிலுக்கு வழங்கப்பட்ட காணியில் வைப்பதற்கு இன்று நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்திருந்த நிலையில் ஊர் மக்கள் உசாராகி சிவன் கோவிலில் ஒன்று சேர்ந்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டனர். 

இதன் போது சம்பவ இடத்திற்கு வருகை தந்தமாங்குளம் பொலீஸார் பொது மக்களுடன் உரையாடிய போது சட்டவிரோதமாகமேற்கொள்ளும் இந் நடவடிக்கையை தடுப்பதாகவும் தெரிவித்து சென்றுள்ளனர்.


முல்லைத்தீவில் புத்தர் சிலை வைக்கும் நடவடிக்கை - பொது மக்கள் எதிர்ப்புsamugammedia தனக்கு மூக்கு போனாலும் பிரச்சினையில்லை எதிரிக்கு சகுனம் பிழைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் முல்லைத்தீவு மாவட்டம் ஓட்டுசுட்டான்பிரதேச செயலக பிரிவிலுள்ள திருமுறிகண்டி செல்வபுரம் பகுதியில் அமைந்துள்ள சிவன் ஆலயக் காணியில் புத்தகர் சிலை  ஒன்றை வைப்பதற்கு ஊடகவியலாளர்ஒருவர் எடுத்த நடவடிக்கை கிராம மக்களின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டுள்ளதாக எதிர்ப்பில் ஈடுப்பட்ட பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவதுமிக நீண்ட காலமாக உள்ள சிவன் கோவில் காணியில்  அதே கிராமத்தைச் சேர்ந்த இடையில்  றோமன் கத்தோலிக்கம் அல்லாத கிறிஸ்த்தவ மத்திற்கு மாறிய ஊடகவியலாளர் ஒருவரும் குடியிருந்து வருகின்றார். ஆலய நிர்வாகத்திற்கும், குறித்த ஊடகவியலாளருக்கும்  இடையில் மீள் குடியேற்றத்திற்கு பின்னனர் பிணக்கு நிலவி வருகிறது.இந்த நிலையில் குறித்த காணியில் ஒரு பகுதியை சிவன் ஆலயத்திற்கும் ஒரு பகுதியை ஊடகவியலாளருக்கும் என பிணக்குக்கு தீர்வு காணப்பட்ட போதும் குறித்த ஊடகவியலாளர் அதனை ஏற்றுக்கொள்ளாது காணியின் பெரும் பகுதியை தனக்கு வழங்க வேண்டும் என்று  தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கையில் ஈடுப்பட்டு வந்துள்ளார். அவரின் அனைத்து நடவடிக்கைகளும் தோல்வியடைந்த நிலையில் குறுக்கு வழியில் சிந்தித்த ஊடகவியலாளர் கிளிநொச்சியில் அரசியலில் அதிகாரத்தில் உள்ளவர்களின் செல்வாக்குடன் தனக்கு மூக்கு போனாலும் பிரச்சினையில்லை  சிவன் கோவில் நிர்வாகத்திற்கும் ஊர் மக்களுக்கும் ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்ற அடிப்படையில் இராணுவத்துடன் உரையாடி அவர்களின் ஒப்புதலுடன் அவர்களின் மூலம் பெறப்பட்ட புத்தகர் சிலை ஒன்றை சிவன்கோவிலுக்கு வழங்கப்பட்ட காணியில் வைப்பதற்கு இன்று நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்திருந்த நிலையில் ஊர் மக்கள் உசாராகி சிவன் கோவிலில் ஒன்று சேர்ந்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டனர். இதன் போது சம்பவ இடத்திற்கு வருகை தந்தமாங்குளம் பொலீஸார் பொது மக்களுடன் உரையாடிய போது சட்டவிரோதமாகமேற்கொள்ளும் இந் நடவடிக்கையை தடுப்பதாகவும் தெரிவித்து சென்றுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement