• Mar 31 2025

இலங்கைக்கு படையெடுக்கும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை உயர்வு..!

Sharmi / Mar 28th 2025, 6:22 pm
image

ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து மார்ச் மாதம் 26 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 684,960 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 111,982  ஆக காணப்படுகின்றது.

மேலும், ரஷ்யாவிலிருந்து 90,255 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 64,711 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 48,129 சுற்றுலாப் பயணிகளும்,சீனாவிலிருந்து 37,268 சுற்றுலாப் பயணிகளும், பிரான்ஸிலிருந்து 41,449 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 25,513 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு படையெடுக்கும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை உயர்வு. ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து மார்ச் மாதம் 26 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 684,960 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.அதில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 111,982  ஆக காணப்படுகின்றது.மேலும், ரஷ்யாவிலிருந்து 90,255 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 64,711 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 48,129 சுற்றுலாப் பயணிகளும்,சீனாவிலிருந்து 37,268 சுற்றுலாப் பயணிகளும், பிரான்ஸிலிருந்து 41,449 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 25,513 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement