• Apr 02 2025

நாடளாவிய ரீதியில் குளுகோமா நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வு!

Chithra / Mar 31st 2025, 11:15 am
image

 

நாடளாவிய ரீதியில் தற்போது குளுகோமா எனப்படும் கண் அழுத்த நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 3.8 சதவீதம் உயர்வடைந்துள்ளதாக கண் சத்திரசிகிச்சை வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

ஆரம்பத்திலேயே இந்த குளுகோமா நோயைக் கட்டுப்படுத்த வேண்டும், 

உரிய சிகிச்சையை பெறாவிடின் இறுதியில் பார்வையை இழக்க நேரிடம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

40 வயதைக் கடந்தவர்களே இந்த நோயினால் அதிகம் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு ஒருவருக்கு நோய் அறிகுறிகள் தென்பட்டால் அவர் உடனே கண் சிகிச்சை வைத்தியரை நாடி சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் என கண் சத்திரசிகிச்சை வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


நாடளாவிய ரீதியில் குளுகோமா நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வு  நாடளாவிய ரீதியில் தற்போது குளுகோமா எனப்படும் கண் அழுத்த நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 3.8 சதவீதம் உயர்வடைந்துள்ளதாக கண் சத்திரசிகிச்சை வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஆரம்பத்திலேயே இந்த குளுகோமா நோயைக் கட்டுப்படுத்த வேண்டும், உரிய சிகிச்சையை பெறாவிடின் இறுதியில் பார்வையை இழக்க நேரிடம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 40 வயதைக் கடந்தவர்களே இந்த நோயினால் அதிகம் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஒருவருக்கு நோய் அறிகுறிகள் தென்பட்டால் அவர் உடனே கண் சிகிச்சை வைத்தியரை நாடி சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் என கண் சத்திரசிகிச்சை வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement