• Apr 02 2025

யாழில் ஐஸுடன் இளைஞன் கைது - தாயாரும் ஏற்கனவே விளக்கமறியலில்!

Chithra / Mar 31st 2025, 11:09 am
image


யாழ்ப்பாணம் - ஏழாலை, தெற்கு மயிலங்காடு பகுதியில் 10 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபரான 27 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுன்னாகம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

குறித்த இளைஞன் ஏற்கனவே ஒரு தடவை போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நிலையில் 6 மாதங்கள் சிறையில் இருந்தவர். அந்த வழக்கும் இன்னமும் நிலுவையில் உள்ளது. அத்துடன் குறித்த இளைஞனின் தாயார் கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் போதைப்பொருளுடன் கைதாகி சிறையில் உள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான சூழ்நிலையில் குறித்த இளைஞன் நேற்றையதினம் கைது செய்யப்பட்டு சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுகின்றார். 

விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் ஐஸுடன் இளைஞன் கைது - தாயாரும் ஏற்கனவே விளக்கமறியலில் யாழ்ப்பாணம் - ஏழாலை, தெற்கு மயிலங்காடு பகுதியில் 10 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபரான 27 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார்.சுன்னாகம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.குறித்த இளைஞன் ஏற்கனவே ஒரு தடவை போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நிலையில் 6 மாதங்கள் சிறையில் இருந்தவர். அந்த வழக்கும் இன்னமும் நிலுவையில் உள்ளது. அத்துடன் குறித்த இளைஞனின் தாயார் கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் போதைப்பொருளுடன் கைதாகி சிறையில் உள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.இவ்வாறான சூழ்நிலையில் குறித்த இளைஞன் நேற்றையதினம் கைது செய்யப்பட்டு சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுகின்றார். விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement