• Feb 20 2025

கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இன்றையதினம் பொறுப்பேற்பு!

Chithra / Feb 17th 2025, 2:25 pm
image


கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக A.நளின் தர்சன இன்றையதினம் தனது பதவியை பொறுப்பேற்றுக்கொண்டார்.

அவர் மோதரையில் 3 வருடம் 3 மாதம் காலம் கடமையாற்றிய  நிலையிலேயே , இன்றைய தினம் கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்து சர்வ மத ஆசிகளுடன் பொறுப்பேற்றுக்கொண்டார் 

கடந்த மூன்று ஆண்டுகளாக பணியாற்றிய வெதகெதர, பதுளைக்கு திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையிலேயே அவர் குறித்த பதவியை பொறுப்பேற்றுக்கொண்டார்.

இதே வேளை, இந்த புதிய அரசாங்கத்தில் ஒவ்வொரு 3 ஆண்டின் பின்னரும் பொலிஸ் பொறுப்பதிகாரிகளுக்கான இடமாற்றம் நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.


கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இன்றையதினம் பொறுப்பேற்பு கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக A.நளின் தர்சன இன்றையதினம் தனது பதவியை பொறுப்பேற்றுக்கொண்டார்.அவர் மோதரையில் 3 வருடம் 3 மாதம் காலம் கடமையாற்றிய  நிலையிலேயே , இன்றைய தினம் கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்து சர்வ மத ஆசிகளுடன் பொறுப்பேற்றுக்கொண்டார் கடந்த மூன்று ஆண்டுகளாக பணியாற்றிய வெதகெதர, பதுளைக்கு திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையிலேயே அவர் குறித்த பதவியை பொறுப்பேற்றுக்கொண்டார்.இதே வேளை, இந்த புதிய அரசாங்கத்தில் ஒவ்வொரு 3 ஆண்டின் பின்னரும் பொலிஸ் பொறுப்பதிகாரிகளுக்கான இடமாற்றம் நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement