கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட கல்லாறு கிராமத்தில் 250ற்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்ற நிலையில், குடிநீரை பெற்றுக்கொள்வதில் மக்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
குறித்த பகுதியில் நீர் நிலைகளில் நீர் உவநீராக காணப்படுகின்ற நிலையில் குடிநீரை வழங்கும் பொருட்டு கரைச்சி பிரதேச சபையினால் பிரமந்தனாறு கல்லாறு குடிநீர்த்திட்டம் பிரமந்தன் பகுதியில் நீர்த்தாங்கி மூலம் கல்லாறு கிராமத்திற்கு நீரை வழங்கி வந்த நிலையில், குறித்த நீர் வழங்கல் பல நாட்களாக செயலிழந்து காணப்படுகின்றது.
இதன் காரணமாக மக்கள் தூய்மையான குடிநீரை பணம் கொடுத்தே பெறுகின்றனர்.
தனியார் 1லீற்றர் நீரை நான்கு ரூபாவிற்கு விற்பனை செய்து வருகின்றனர்.
பிரதேச சபையும் இடையிடையே பெளசர் மூலம் நீரை விநியோகத்தாலும் குறித்த நீரை குடிக்க பயன்படுத்த முடியாத நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை மூலம் தமக்கு நிலையான நீர் விநியோகத்தை வழங்க உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.
குடிநீருக்காக அல்லற்படும் கிளிநொச்சி கல்லாறு கிராம மக்கள். கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட கல்லாறு கிராமத்தில் 250ற்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்ற நிலையில், குடிநீரை பெற்றுக்கொள்வதில் மக்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.குறித்த பகுதியில் நீர் நிலைகளில் நீர் உவநீராக காணப்படுகின்ற நிலையில் குடிநீரை வழங்கும் பொருட்டு கரைச்சி பிரதேச சபையினால் பிரமந்தனாறு கல்லாறு குடிநீர்த்திட்டம் பிரமந்தன் பகுதியில் நீர்த்தாங்கி மூலம் கல்லாறு கிராமத்திற்கு நீரை வழங்கி வந்த நிலையில், குறித்த நீர் வழங்கல் பல நாட்களாக செயலிழந்து காணப்படுகின்றது. இதன் காரணமாக மக்கள் தூய்மையான குடிநீரை பணம் கொடுத்தே பெறுகின்றனர்.தனியார் 1லீற்றர் நீரை நான்கு ரூபாவிற்கு விற்பனை செய்து வருகின்றனர்.பிரதேச சபையும் இடையிடையே பெளசர் மூலம் நீரை விநியோகத்தாலும் குறித்த நீரை குடிக்க பயன்படுத்த முடியாத நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை மூலம் தமக்கு நிலையான நீர் விநியோகத்தை வழங்க உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.