• May 20 2024

சமையலறையில் புதையல் தோண்டிய நபர்களுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!

Sharmi / Jan 18th 2023, 12:59 pm
image

Advertisement

கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாத்தியாகம  பகுதியில் புதையல் தோண்டிய மூன்று சந்தேக நபர்களை இம்மாதம் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் இன்று(18) உத்தரவிட்டார்.

வாத்தியாகம,லைட்வீதி,மற்றும் காலி பகுதியைச் சேர்ந்த 18,29,மற்றும் 25 வயதுடைய மூன்று பேரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள்  கந்தளாய் வாத்தியாகம பகுதியிலுள்ள வீடொன்றினுள் புதையல் தோண்டுவதாக கந்தளாய் புலனாய்வு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்தே பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்ற போது வீட்டின் சமையலறை பகுதியில் இருபது அடிவரை தோன்றிக்கொண்டிருந்த போதே மூன்று சந்தேகநபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.  

 இறந்த ஒருவர் இந்த இடத்தில் புதையல் இருப்பதாக கனவில் வந்து கூறியதாக தெரிவித்ததை அடுத்தே அந்த  இடத்தில்  தோண்டியதாக கூறப்படுகின்றது.

இதற்கு முன்னரும் அந்த வீட்டில் புதையல் தோன்றிய போது ஐந்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

புதையல் தோண்டிய  இடத்தில் பெரிய இரும்பு சங்கிலி,தண்ணீர் இறைக்கும் மோட்டார்,தடுப்பு பொருட்கள் உட்பட இரும்பு பொருட்கள் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

சந்தேக நபர்களை  கந்தளாய் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

சமையலறையில் புதையல் தோண்டிய நபர்களுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாத்தியாகம  பகுதியில் புதையல் தோண்டிய மூன்று சந்தேக நபர்களை இம்மாதம் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் இன்று(18) உத்தரவிட்டார்.வாத்தியாகம,லைட்வீதி,மற்றும் காலி பகுதியைச் சேர்ந்த 18,29,மற்றும் 25 வயதுடைய மூன்று பேரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.சந்தேக நபர்கள்  கந்தளாய் வாத்தியாகம பகுதியிலுள்ள வீடொன்றினுள் புதையல் தோண்டுவதாக கந்தளாய் புலனாய்வு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்தே பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்ற போது வீட்டின் சமையலறை பகுதியில் இருபது அடிவரை தோன்றிக்கொண்டிருந்த போதே மூன்று சந்தேகநபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.   இறந்த ஒருவர் இந்த இடத்தில் புதையல் இருப்பதாக கனவில் வந்து கூறியதாக தெரிவித்ததை அடுத்தே அந்த  இடத்தில்  தோண்டியதாக கூறப்படுகின்றது.இதற்கு முன்னரும் அந்த வீட்டில் புதையல் தோன்றிய போது ஐந்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். புதையல் தோண்டிய  இடத்தில் பெரிய இரும்பு சங்கிலி,தண்ணீர் இறைக்கும் மோட்டார்,தடுப்பு பொருட்கள் உட்பட இரும்பு பொருட்கள் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேக நபர்களை  கந்தளாய் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement