• Nov 25 2024

யுக்திய என்ற பேரில் இடம்பெறும் பொலிஸாரின் அடாவடித்தனம்! அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கை

Chithra / Jan 11th 2024, 8:31 am
image

 

குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்வதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் யுக்திய விசேட நடவடிக்கை தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் கவனம் செலுத்தியுள்ளார்.

இந்த நடவடிக்கை குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அண்மையில் வெளியிட்ட அறிவிப்பு தொடர்பில் அமெரிக்கா கவனத்தை செலுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்துவது இன்றியமையாதது.

சட்டத்தை அமுல்படுத்தல், சட்டத்தின் கொள்கைகளை நிலைநிறுத்துதல் மற்றும் நடவடிக்கைகளில் உரிய செயல்முறையும் மிகவும் முக்கியமானது என்றும் தூதுவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த சமநிலையை நிலைநிறுத்துவது நீதி மற்றும் பொது நம்பிக்கையை பேணுவது முக்கியமானது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சித்திரவதை, மனிதாபிமானமற்ற அல்லது இழிவான நடத்தை, தன்னிச்சையான கைதுகள் மற்றும் நீதி நடவடிக்கைகளின் போது தடுத்து வைக்கும் சம்பவங்கள் போன்ற அடிப்படை உரிமை மீறல்கள் தொடர்பாக ஆணைக்குழுவிற்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளதற்கமைய, இந்த நடவடிக்கையானது நாட்டின் பல்வேறு பகுதிகளில் அநீதி இழைக்கப்படும் சம்பவங்களின் தலைப்பாக மாறியுள்ளது.

இதனால் நடவடிக்கையின் பெயரான நீதி என்ற வார்த்தையும் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

யுக்திய என்ற பேரில் இடம்பெறும் பொலிஸாரின் அடாவடித்தனம் அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கை  குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்வதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் யுக்திய விசேட நடவடிக்கை தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் கவனம் செலுத்தியுள்ளார்.இந்த நடவடிக்கை குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அண்மையில் வெளியிட்ட அறிவிப்பு தொடர்பில் அமெரிக்கா கவனத்தை செலுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்துவது இன்றியமையாதது.சட்டத்தை அமுல்படுத்தல், சட்டத்தின் கொள்கைகளை நிலைநிறுத்துதல் மற்றும் நடவடிக்கைகளில் உரிய செயல்முறையும் மிகவும் முக்கியமானது என்றும் தூதுவர் வலியுறுத்தியுள்ளார்.இந்த சமநிலையை நிலைநிறுத்துவது நீதி மற்றும் பொது நம்பிக்கையை பேணுவது முக்கியமானது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.சித்திரவதை, மனிதாபிமானமற்ற அல்லது இழிவான நடத்தை, தன்னிச்சையான கைதுகள் மற்றும் நீதி நடவடிக்கைகளின் போது தடுத்து வைக்கும் சம்பவங்கள் போன்ற அடிப்படை உரிமை மீறல்கள் தொடர்பாக ஆணைக்குழுவிற்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டது.இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளதற்கமைய, இந்த நடவடிக்கையானது நாட்டின் பல்வேறு பகுதிகளில் அநீதி இழைக்கப்படும் சம்பவங்களின் தலைப்பாக மாறியுள்ளது.இதனால் நடவடிக்கையின் பெயரான நீதி என்ற வார்த்தையும் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement